அகத்தியர் தீட்சாவிதி இருநூறு

அகத்தியர் தீட்சாவிதி இருநூறு என்பது சமயநெறி கூறும் ஒரு நூல். அகத்தியர் என்று போற்றப்பட்ட ஒருவர் 16ஆம் நூற்றாண்டில் இயற்றிய நூல் இது.[1] 1861 இல் பாலைக்காட்டுச்சேரி சுலுத்தான்பேட்டையிலிருக்கும் பிள்ளைக்குமார் சுப்பிரமணியம்பிள்ளையால் அச்சில் வெளிவந்ததது.[2]

அகத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டவர் அகத்தியர். இந்த அகத்தியர் அகத்திலிருக்கும் அழுக்குகளை எண்ணம் என்னும் தீயிலிட்டுக் கொளுத்தியவர். அக அழுக்கைத் தீயச்செய்வது தீக்கை. இந்தத் தீக்கையைத் ‘தீட்சை’ என்கிறோம்.

இந்த நூலில் 294 பாடல்கள் உள்ளன. பிரணாயாமம் என்னும் வளிநிலை, காயசித்தி செய்யும் 43 கோணங்கள், சிவபூசை முதலானவை இதில் சொல்லப்பட்டுள்ளன.

சங்கு, மணி, செகண்டி ஆகிய மூன்றும் சைவ நாதங்கள். இந்த நாதங்களால் (ஓசைகளால்) சிவயோகம் பெறுவது பற்றி இந்த நூல் விளக்குகிறது.

இந்த நூலின் இறுதிப் பாடல்
பணிமாறு காலத்தே மணியின் ஓசை
பாங்கான சேகண்டி நாத ஓசை
பணிமாறு காலத்தே மவுன தோத்திரம்
பத்தியுறும் வாலைகையில் லேகியத்தை ஈந்து
பணிமாறு காலத்தே சகல சித்தும்
பரிவாகத் தாஎன்று கையில் வாங்கிப்
பணிமாறு காலத்தே பணிந்து தெண்டம்
பண்ணிடுவாய் பூசைவிதி தீட்சை முற்றே.

மேற்கோள்கள்

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3 (2005 ed.).
  2. "அகஸ்தியமுனிவர் அருளிச்செய்த தீட்சாவிதி". archive.org. மெய்ஞ்ஞான விளக்கவச்சுக்கூடம். Retrieved 31 October 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya