அகைந்தெ இச்சிலெமா
அகைந்தெ இச்சிலெமா (Hakainde Hichilema, பிறப்பு: 4 சூன் 1962) ஆகத்து 24, 2021 அன்று பதவியேற்ற சாம்பியா நாட்டு 7வது குடியரசுத் தலைவர்; இவர் அந்நாட்டு முதன்மையான வணிகரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] முந்தைய ஐந்து தேர்தல்களிலும் (2006, 2008,2011,2015,2016) தோல்வியுற்ற போதிலும் 2021ல்இ நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 59% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[2] 2006 ஆண்டு முதல் தேசிய வளர்ச்சிக்கான ஐக்கிய கட்சியின் தலைவராக முன்னடத்தி வருகிறார். தமது தேர்தல் வெற்றிக்கு முன்னதாக 2015 முதல் 2021 வரை குடியரசுத் தலைவராக விளங்கிய எட்கார் லுங்குவின் முதன்மை எதிர்கட்சித் தலைவராக இருந்தார். 11 ஏப்ரல் 2017 அன்று இச்சிலெமா நாட்டுத் துரோமிழைத்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லுங்குவின் இச்செயல் தமது எதிர் கருத்துக்களை நசுக்கும் விதமான சட்டவிரோதப் போக்காக பார்க்கப்பட்டது. இந்தக் கைதிற்கு எதிராக சாம்பியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலான போராட்டங்கள் நிகழ்ந்தன. இதன்விளைவாக 16 ஆகத்து 2017 விடுதலை செய்யப்பட்டு நாட்டுத் துரோக குற்றச்சாட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia