அக்கனாபுரம்
அக்கனாபுரம் (Akkanapuram) தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அக்கனாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூராகும். இந்த கிராமமானது அக்கனாபுரம் மற்றும் அக்கனாபுரம் காலனி ஆகிய இரு பகுதிகளாக பிரிந்துள்ளது. இக்கிராமானது ஸ்ரீவில்லிப்புத்தூர் (21 கி.மீ), பள்ளபட்டி (27 கி.மீ), விருதுநகர் (28 கி.மீ), சிவகாசி (29 கி.மீ) மற்றும் மதுரை விமான நிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிராமத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் மறவர், நாயக்கர், பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். [2] வரலாறுநாயக்கர்களின் காலத்தில், அந்த கிராமத்தை திருமால் நாயக்கர் மன்னரின் அரசிகளில் ஒருவரான அக்கம்மாள் என்பாருக்கு வழங்கப்பட்டது. எனவே அந்தக் கிராமத்திற்கு அக்கம்மாள்புரம் என்று பெயரிடப்பட்டது, பின்னர் அப்பெயரானது மருவி அதன் தற்போதைய பெயரான அக்கனாபுரம் என அழைக்கப்படுகிறது. [3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia