அக்கா பரதேசி சுவாமிகள்அக்கா சுவாமிகள் என்பவர் புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்த சித்தர் ஆவார்.[1] இவரைக் குரு அக்கா சுவாமிகள், அக்கா பரதேசி சாமியார், அக்கா சித்தர் போன்ற பெயர்களில் பக்தர்கள் அன்போடு அழைத்தனர். வரலாறுசிறுவயதில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, களிமண்ணால் விநாயகர் சிலை செய்து பூஜித்து மகிழ்ந்தார். அவருடைய விநாயகரை ஒரு பெண்ணும் வழிபட்டுள்ளார். தன்னுடைய பிள்ளையாரை வணங்கும் அப்பெண்ணின் செயலைக் கண்டு மகிழ்ந்து அப்பெண்ணின் கைகளில் முத்தம் தந்தார். அப்பெண்ணோ " அக்கா வயதுடைய பெண்ணிற்கு முத்தம் கொடுத்தல் தகுமோ " எனக் கூறினாள். அதனை நினைத்துச் சிறுவனாக இருந்த அக்கா சாமியார் வருந்தினார். பின் பெண் இன்பத்திலிருந்து தன்னை விலக்கி அனைவரையும் அக்கா என அழைக்கலானார். இவர் அனைவரையும் அக்கா என அழைத்துவந்தமையால் அக்கா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். சமாதிக் கோயில்இவர் 1872 -ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஜீவ சமாதி அடைந்தார். ஜீவ சமாதிக் கோயிலில் அக்கா சுவாமிகளின் பிரதான சீடரான நாராயண சுவாமிகள் சன்னதியும் அமைந்துள்ளது. இவரது 110-ஆவது குருபூசையானது 2015 -ஆம் ஆண்டு நடந்தது. அந்நாளில் புதுச்சேரி முதல்வரான ரங்கசாமியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சித்துகள்
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia