அக்குமோலா பிராந்தியம்
அக்மோலா பிராந்தியம் (Akmola Region, காசாக்கு: Ақмола облысы , اقمولا) என்பது கசக்கஸ்தான் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் கோக்ஷெட்டாவ் நகரம் ஆகும். தேசிய தலைநகரான நூர்-சுல்தான் இப்பிராந்தியத்தால் சூழப்பட்டுள்ளது. என்றாலும் அரசியல் ரீதியாக அக்மோலா பிராந்தியத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் மக்கள் தொகை 715,000 ஆகும். இதில் கோக்ஷெட்டா நகரின் மக்கள் தொகை 157,000 ஆகும். பிராந்தியததின் பரப்பளவு 146,200 சதுர கிலோமீட்டர். இந்த பிராந்தியமும், கராகண்டா பிராந்தியம் மட்டுமே கசக்கஸ்தான் நாட்டின் பன்னாடடு எல்லைகளைத் தொடாதவை ஆகும். அக்மோலா பிராந்தியம் வடக்கில் வடக்கு கசக்கஸ்தான் பிராந்தியத்தையும், கிழக்கில் பாவ்லோடர் பிராந்தியத்தையும், தெற்கில் கராகண்டி பிராந்தியத்தையும், மேற்கில் கோஸ்தானே பிராந்தியத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன. இப்பகுதியில் தங்கம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் சில உள்ளன. சொற்பிறப்பியல்கசாக் மொழியில் அக்மோலா என்றால் வெள்ளை புதைப்பு என்று பொருள். மக்கள் வகைப்பாடுஇனக்குழுக்கள் (2020):[3]
நிர்வாக பிரிவுகள்இப்பிராந்தியம் நிர்வாக ரீதியாக பதினேழு மாவட்டங்களாகவும், கோக்ஷெட்டாவ் மற்றும் ஸ்டெப்னோகோர்ஸ்க் என இரு மாநகரங்களவும் பிரிக்கப்பட்டுள்ளது.[4]
குறிப்பிடத்தக்க நபர்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia