அசிட்டிலீன் (Acetylene, IUPAC Name: Ethyne ) என்பது C2H2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது ஆல்கைன் வகை ஐதரோகார்பனின் ஒரு எளிய மூலக்கூறு ஆகும். [5] இந்த நிறமற்ற வாயு பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு எரிபொருளாகவும், பல வேதிச்சேரமங்களை உருவாக்கப் பயன்படும் மூலப்பொருளாகவும் உள்ளது. இச்சேர்மம் தனது தூய வடிவத்தில் நிலையற்றதாக இருப்பதால், இச்சேர்மம் கரைசலாகவே கையாளப்படுகிறது. தூய அசிட்டிலீனானது மணமற்றதாகும். ஆனாலும், வணிக நோக்கில் விற்கப்படும் அசிட்டிலீனானது ஒரு குறிப்பிடத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். இதன் காரணம் அசிட்டிலீனுடன் கலந்திருக்கும் மாசுப்பொருட்களேயாகும்.[6]அசிட்டிலீனின் இரு கரியணுககளும் முப்பிணைப்பினால் இணைக்கப்பட்டு ஒரு நிறைவுறா ஐதரோகார்பனாக, அல்க்கைனாக உள்ளது. கார்பன்–கார்பன் முப்பிணைப்பானது இச்சேர்மத்தில் உள்ள நான்கு அணுக்களையும் ஒரே நேர்கோட்டில் வைக்கிறது. மேலும் CCH பிணைப்புக் கோணமானது 180° ஆகவும் உள்ளது.[7]
தயாரிப்பு
1950 ஆம் ஆண்டுகள் வரையிலும், அசிட்டிலீன் பெரும்பாலும் மீத்தேனின் பகுதியளவு எரிதல் வினை மூலமாகவே தயாரிக்கப்பட்டு வந்தது.[8][9] ஐதரோகார்பன்களை பிளவுபடுத்தி எத்திலீனைத் தயாரிக்கும் முறையில் துணை விளைபொருளாகப் பெறப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டில், தோராயமாக 400,000 டன்கள் அசிட்டிலீனானது இம்முறையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.[10]
எத்திலீனுடன் இவ்வாயு கலந்திருப்பது பொதுவாக விரும்பத்தக்கதல்ல. ஏனெனில், இதன் வெடிக்கும் தன்மையும் மற்றும் சீய்க்லர்-நட்டா வினைவேக மாற்றிகளை நச்சாக மாற்றக்கூடிய திறனுமேயாகும். எத்திலீனுடன் கலந்திருக்கும அசிட்டிலீனானது தெரிவு செய்யப்பட்ட ஐதரசனேற்றத்தின் மூலம் Pd–Ag வினைவேக மாற்றியைப் பயன்படுத்தி எத்திலீனாக மாற்றப்படுகிறது.[11]
1950 கள் வரையிலும், பெட்ரோலியம் முற்றிலுமாக தனித்துப் பிரிக்கப்பட்ட நிலக்கரியே ஒடுக்கப்பட்ட கார்பனின் மூலமாகவும் மற்றும் நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கப்பெற்ற அரோமேட்டிக் பகுதிப்பொருட்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அசிட்டிலீன் பல்வேறு வேதித்தொழிற்சாலைகளில் கரிம வேதிச் சேர்மங்களைத் தயாரிப்பதற்குப் பயன்பட்ட முதன்மையான மூலப்பொருளாகவும் இருந்து வந்தன. 1862 ஆம் ஆண்டில் ஃபிரெடெரிக் ஓலர் என்பவரால் கண்டறியப்பட்ட ஒரு வேதிவினயான
கால்சியம் கார்பைடின் நீராற்பகுப்பு மூலமாகத் தயாரிக்கப்பட்டது. இந்தத் தயாரிப்பு முறையே இன்றளவும் மாணவர்கள் மத்தியில் மிகவும் பயன்பாட்டில் உள்ளதாகும்.[12]
CaC2 + 2H2O → Ca(OH)2 + C2H2
கால்சியம் கார்பைடு தயாரிப்பிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுவதால் (~2000 °செல்சியசு), மின் வில் உலை தேவையாய் உள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில், இந்தச் செயல்முறையானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேதியியலில் ஏற்பட்ட புரட்சியின் மிக முக்கியமான ஒரு பகுதியாக இருந்தது. நயகரா நீர் வீழ்ச்சியின் நீர் மின்சக்தித் திட்டம் அதிக அளவில் மின் உற்பத்தி தயாரிக்கப்பட்டதோடு இது சாத்தியமானது, .[13]
பயன்கள்
இதை மின்சாதனங்கள் வருவதற்கு முன் கார்களின் முன்விளக்குகளில் ஒளி கிடைக்கப் பயன்படுத்தினார்கள். ஆக்சிஜனுடன் தகுந்த விகிதத்தில் கலந்த எரித்தால் 3000˚-க்கு மேல் வெப்பத்தைக் கொடுக்கும் வெண்ணொளி கிடைக்கிறது. மிகை வெப்பத்தைக் கொடுப்பதால் ஆக்சி-அசெட்டிலீன் சுவாலையை, வெண்ணெயைக் கத்தி வெட்டுவதுபோல், உலோககங்களை மிக எளிதாக வெட்டுவதற்கும், உலோகத் துண்டுகளை இணைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இரும்புத் தொட்டிகளில் அடைத்து வைத்தால் அசிட்டிலீன் வெடிக்கும் தன்மையுடையது. ஆகையால், பயன்படுத்துவதற்குச் சற்றுமுன் கால்சியம் கார்பைடு சேர்மத்தை நீருடன் சேர்த்தே அசிட்டிலீனைப் பெறுகிறார்கள். கடலில் மிதக்கும் காப்பு மிதவைகளிலுள்ள ‘ஹோல்ம்ஸ் விளக்கு’ களில் கால்சியம் கார்பைடும், கால்சியம் பாஸ்பைடும் சேர்ந்த கலவை இருக்கிறது. கால்சியம் கார்பைடு கடல் நீருடன் கலந்து அசிட்டிலீனைக் கொடுக்கும்; கால்சியம் பாஸ்பைடு காற்றில் பற்றிக் கொள்ளும். இதனால் அசெட்டிலீன் எரிந்து மிதவைக்கு ஒளி கொடுக்கிறது. அசிட்டிலீனை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து ‘பாலிவினைல் குளோரைடு’ என்ற பலபடி நெகிழியை உற்பத்தி செய்கிறார்கள். மின்கம்பிகளின் மேலுறை இவ்வகை நெகிழியால் ஆனது. அசிட்டிலீனை ஐதரசனுடன் சேர்த்தால் எத்திலீன் கிடைக்கும். எத்திலீன் வாயு பாலிஎதிலீன் நெகிழியை செய்யப் பயன்படும் முக்கிய மூலப்பொருளாகும்.
மேற்கோள்கள்
↑Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 375. doi:10.1039/9781849733069-FP001. ISBN978-0-85404-182-4. The name acetylene is retained for the compound HC≡CH. It is the preferred IUPAC name, but substitution of any kind is not allowed; however, in general nomenclature, substitution is allowed, for example fluoroacetylene [fluoroethyne (PIN)], but not by alkyl groups or any other group that extends the carbon chain, nor by characteristic groups expressed by suffixes.
↑Whitten K. W., Gailey K. D. and Davis R. E. General Chemistry (4th ed., Saunders College Publishing 1992), p. 328–329, 1046. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-03-072373-6.
↑Habil, Phil; Sachsse, Hans (1954). "Herstellung von Acetylen durch unvollständige Verbrennung von Kohlenwasserstoffen mit Sauerstoff [Production of acetylene by incomplete combustion of hydrocarbons with oxygen]". Chemie Ingenieur Technik26 (5): 245–253. doi:10.1002/cite.330260502.
↑Habil, Phil; Bartholoméa, E. (1954). "Probleme großtechnischer Anlagen zur Erzeugung von Acetylen nach dem Sauerstoff-Verfahren [Problems of large-scale plants for the production of acetylene by the oxygen method]". Chemie Ingenieur Technik26 (5): 253–258. doi:10.1002/cite.330260503.