அசிட்டைல் நைட்ரேட்டு
அசிட்டைல் நைட்ரேட்டு (Acetyl nitrate) என்பது CH3C(O)ONO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் நைட்ரிக் மற்றும் அசிட்டிக் அமிலங்களின் கலவையின் நீரிலி எனவும் வகைப்படுத்தப்படுகிறது. இது ஒரு நிறமற்ற வெடிக்கும் தன்மை உள்ள திரவமாகும். ஈரப்பதமான காற்றுடன் வெண்புகையைத் தருகிறது. தொகுப்பு முறை மற்றும் வினைகள்இச்சேர்மமானது அசிட்டிக் நீரிலியுடன் டைநைட்ரசன்பென்டாக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் இவற்றின் வினைகளின் மூலம் தயாரிக்கப்படுகிறது:
இச்சேர்மமானது காற்றுடன் வினைபுரிந்து, முந்தைய வினையின் பின்னோக்கு வினையாக, அசிட்டிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக நீராற்பகுக்கப்படுகிறது. மாற்றாக நைட்ரிக் அமிலமானது கீட்டீனுடன் சேர்க்கை விளைபொருளைத் தருகிறது. இச்சேர்மமானது நைட்ரோஏற்றம் மற்றும் நைட்ராபகுப்பு வினைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.[1] இச்சேர்மமானது அசிட்டைல் குளோரைடின் பண்பினையொத்து, அமீன்களை அசிட்டைலேற்றம் செய்கிறது.:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia