இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
2011இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2012இல் ஏப்ரல் 23 அன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். இவருக்கு முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் நரேந்திர ஹிர்வானி பயிற்சியாளராக இருந்துள்ளார். தனது முதல் ஐபிஎல் பருவத்திலேயே மூன்று அடுத்தடுத்த இலக்குகளை [ஆட்ரிக்) எடுத்தார். ஐபிஎல்லின் வரலாற்றில் ஆட்ரிக் எடுத்த ஏழு பந்து வீச்சாளர்களில் ஒருவரானார்[3].
முன்குறித்து நிகழ்த்துதல் குற்றச்சாட்டும் கைதும்
மே 16, 2013 அன்று ஐபிஎல் ஆறாம் பருவத்து விளையாட்டில் குறிப்பிட்ட பந்து பரிமாற்றத்தில் முன்கூட்டியே தீர்மானித்தபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு இவரையும் இவரது அணித்தோழர்களான சிறிசாந்த் மற்றும் அங்கீத் சவானையும் தில்லி காவல்துறை கைது செய்தது.[4][5]. இவர்கள் மூன்று பேரின் மீதும் இந்தியக் குற்றவியல் சட்டம் 420 மற்றும் 120(பி) கீழ் மும்பை மரைன் டிரைவ் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.[6] சாண்டிலா மே 5, 2013 அன்று புனே வாரியர்சு இந்தியா எதிரான தனது ஆட்டத்தில் முன்குறித்து நிகழ்த்துவதற்காக ₹20 இலட்சம் (ஐஅ$23,000) பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[7] கைதானபிறகு இவர் பணியாற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இவரை பணியிடைநீக்கம் செய்துள்ளது.[8]