அசீமா சாட்டர்ஜி
அசீமா சாட்டர்ஜி (Asima Chatterjee) (Bengali: অসীমা চট্টোপাধ্যায়) (23 செப்டம்பர் 1917 – 22 நவம்பர் 2006) ஓர் இந்திய வேதியியலாளர். இவர் கரிம வேதியியலிலும் நிலைத்திணைசார் (தாவர) மருந்தியலிலும் கணிசமான பங்களிப்பு செய்துள்ளார்.[1] இவரின் குறிப்பிடத்தகு பணி வின்சா ஆல்கலாயிடுகளிலும் கைகால் வலிப்புத் தடுப்பு, மலேரியக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளிலும் அமைந்தது. இவர் இந்தியத் துணைக்கண்ட மூலிகைகள் ஆய்வில் பெரும்பணி ஆற்றியுள்ளார். வாழ்க்கைஇளமைஅசீமா சாட்டர்ஜி (நேயி முகர்ஜி) முந்தைய வங்காள மாகாணத்தில் 1917 செப்டம்பர் 23 இல் பிறந்தார் (நேயி முகர்ஜி).[2] இவர் கொல்கத்தாவில் பள்ளிக்கல்வியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழக இசுகாட்டிழ்சு கல்லூரியில் சேர்ந்து வேதியியலில் தகவுறு மாண்போடு 1936 இல் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.[3][4] கல்விப்பணிஇவர் 1938 இல் வேதியியல் முதுவர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்டம் தாவரப் பொருள்களிலும் செயற்கைக் கரிம வேதியியலிலும் பெற்றுள்ளார். அப்போது அங்கே பிரஃபுல்லா சந்திர ராயும் பெர்ர. எஸ்.என். போசும் இவரின் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். கூடுதலாக இவர் மடிசனில் உள்ள வில்கான்சின் பல்கலைக்கழகத்திலும் கால்டெக்கிலும் ஆய்வுப் பட்டறிவும் பெற்றவர் ஆவார். வாழ்க்கைப்பணிஇவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சீமாட்டி பிரபவுர்ன் கல்லூரியில் 1940 இல் வேதியியல் துறையின் நிறுவனத் தலைவராகச் சேர்ந்தார். இவர் 1940 இல் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றால் முதன்முதலாக அறிவியலில் முதுமுனைவர் பட்டம் பெற்ற பெண்மணியானார்.[1] இவர் 1954 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக தூய வேதியியல் துறையில் சேர்ந்தார்.இவர் 1962 இல் அப்பல்கலைக்கழகத்தின் தகைமைசான்ற கைரா வேதியியல் பேராசிரியர் பதவியை ஏற்றார், இப்பதவியில் இவர் 1982 வரைதொடர்ந்து இருந்தார்.[1] தகைமைகளும் விருதுகளும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia