அச்சகுரா ஆளுநரகம்
அல்-ஜஹ்ரா கவர்னரேட் (Jahra Governorate, அரபி: محافظة الجهراء Muḥāfaẓat al-ahrāʾ) என்பது குவைத்தின் ஆறு கவர்னரேட்டுகள் எனப்படும் ஆளுநரகங்களில் ஒன்றாகும் . இது மற்ற கவர்னரேட்டுகளுக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. இது ஜஹ்ரா நகரத்தை உள்ளடக்கியது. இந்த ஆளுநரகம் புபியன் தீவை உள்ளடக்கியதாகவும், குவைத்தின் மிகப்பெரிய கவர்னரேட்டாகவும் உள்ளது. குவைத்தின் விளைநிலங்களில் பெரும்பாலானவை இதில் உள்ளன. குவைத்தின் வரலாற்றில் ஜஹ்ராவுக்கு முக்கிய இடம் உள்ளது. சிவப்பு அரண்மனை அல்லது அல் கஸ்ர் அல் அஹ்மார் இங்குள்ள மிக முக்கியமான வரலாற்று அடையாளமாகும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவைத்துக்கும் டிவீஷ் இராணுவத்துக்கும் இடையில் பிரபலமான போர் நடந்தது. ஜஹ்ரா கிராமமாக இருந்தபோது அது பாலைவனச்சோலையாகவும் அதன் மக்களில் பெரும்பாலானவர்கள் வேளாண் மக்களாகவும் இருந்தனர். இப்போது ஜஹ்ரா ஒரு பெரிய நகரமாக உள்ளது. மேலும் வேளாண்மை ஒரு சில சிறிய பண்ணைகளாக குறைந்து போயுள்ளது. குவைத்தின் புவியியலின் மையப்பகுதி இந்த ஆளுநரகத்தில் அமைந்துள்ளது. புறநகர்ப் பகுதிகள்
அரசுமுதலாம் சலீம் சபா நசீர் முபாரக் 1985 இல் ஆளுநராக ஆனார். [2] நகரங்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia