அஜய் ஆறு
அஜய் ஆறு (Ajay River) (/ˈədʒɑɪ/) என்பது இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் வழியாகப் பாயும் ஒரு ஆறாகும். அஜய் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி 6,000 சதுர கிலோமீட்டர்கள் (2,300 sq mi) ஆகும்.[1] ஆற்றோட்டம்அஜய் ஆறு, சார்க்கண்டின் சந்தால் பர்கானா மாவட்டத்தில் தியோகர் அருகே தாழ்வான மலைகளில் உருவாகிறது. தென்கிழக்கு திசையில் மோங்கிர் மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மற்றும் பர்த்வான் மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. இறுதியில் கொல்கத்தாவிலிருந்து சுமார் 216 கி. மீ. உயரத்தில் கட்வாவில் பாகீரதி ஆற்றில் கலக்கிறது. அஜய் நதி வடக்கில் மயூரக்ஷி மற்றும் தாமோதர் ஆறு தெற்கில் பங்கா/காரி ஆறுகளுக்கு இடையே ஓடுகிறது.[2] துணையாறுகள்அஜய் ஆற்றின் முக்கியமான கிளை ஆறுகள் சார்க்கண்டில் பத்ரோ மற்றும் ஜெயந்தி ஆறு மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டத்தில் உள்ள துமுனி மற்றும் குனூர் ஆறுகளாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia