அஞ்சலி பரத்வாஜ்![]() அஞ்சலி பரத்வாஜ் (Anjali Bharadwaj) (பிறப்பு 1973) ஒரு இந்திய சமூக ஆர்வலர் ஆவார். இவர் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் தேசிய அளவில் பணியாற்றுகிறார். இவர் மக்கள் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் (NCPRI) இணை ஒருங்கிணைப்பாளரும் [1] மற்றும் சதர்க் நாகரிக் சங்கதன் மக்களாட்சி அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினரும் ஆவார். தகவல் அறியும் உரிமை சட்டம், லோக்பால் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம், குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் உணவுக்கான உரிமை ஆகிய விடயங்களை நோக்கி இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாழ்க்கைபரத்வாஜ் தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தை முடித்தார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[2] பணிபரத்வாஜ் 1999 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தகவல் பெறும் உரிமை இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் பொதுப்பணிகளில் ஈடுபடுவோரின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றிய வினா எழுப்பும் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பி வருகிறார்.[3] இவர் மக்கள் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சாரத்தின் (NCPRI) இணை ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இவரது முயற்சிகளில் தகவல் உரிமை சட்டம், 2005, இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம், 2011, லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாஸ் சட்டம், 2013,[4] மற்றும் குறை தீர்க்கும் மசோதா ஆகியவற்றுக்கான முன்னெடுப்புகள் அடங்கும். அஞ்சலி சதர்க் நாகரிக் சங்கதன் (SNS) நிறுவன உறுப்பினர் ஆவார்.[5] இந்த அமைப்பு 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பொறுப்புணர்வை மேம்படுத்த இந்த அமைப்பு தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது.[6] சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறித்து இவ்வமைப்பு உருவாக்கிய அறிக்கை அட்டைகள் ஊடகங்கள் மூலம் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தின் தொடர்ச்சியான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட மதிப்பீடு & வழக்கறிஞர் குழுவினருடன் (RAAG) இணைந்து பணியாற்றுகிறார்.[7] விருதுகள் மற்றும் மரியாதைகள்அஞ்சலி அமெரிக்க வெளியுறவுத் துறையால் "சர்வதேச ஊழல் எதிர்ப்பு வாகையாளர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவர் 12 உலகளாவிய எதிர்ப்பு ஊழல் வீரர்களில் ஒருவராக இருந்தார். இந்த விருது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தால் சர்வதேச அளவில் அவரவர் நாடுகளில் ஊழல் எதிர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக உறுதியாகப் போராடி வரும் நபர்களை அங்கீகரிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜோ பைடன் கூறினார். பரத்வாஜ் அஞ்சலி “இந்த விருது நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று கூறியுள்ளார்.[8] தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தியதற்காக அஞ்சலிக்கு 2009 இல் சமூக தொழில்முனைவோருக்கான அசோகா பெல்லோஷிப் வழங்கப்பட்டது.[9] நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்காக 2011 ஆம் ஆண்டில் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியின் ஹானர் ரோல் அவருக்கு வழங்கப்பட்டது.[10] ஊடகங்களில் ஊழல் எதிர்ப்புப் பணிஇவர் பல்வேறு ஊடகங்களிலும் ஊழல் எதிர்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விழிப்புணர்வுக்கான கட்டுரைகளை எழுதி வருகிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia