அடிபிக் அமிலம் (Adipic acid) என்னும் இந்தக் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: (CH2)4(COOH)2. தொழிலகங்களின் நோக்கில் அடிபிக் அமிலம் மிகவும் முக்கியமான டைகார்பாக்சிலிக் அமிலமாகும்: ஆண்டுதோறும், 2.5 பில்லியன் கிலோகிராம் அடிபிக் அமில வெண் படிகத் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை முக்கியமாக, நைலான் உற்பத்தியில் முன்னோடிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றபடி, அடிபிக் அமிலம் இயற்கையில் அரிதாகக் கிடைக்கிறது.[3]
தயாரிப்பு
வரலாற்று நோக்கில், அடிபிக் அமிலம் பல்வேறு கொழுப்புகளை உயிர்வளியேற்றம் அடையச் செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது. அடிபிக் அமிலம், சைக்ளோஹெக்சனோல் மற்றும் சைக்ளோஹெக்சனோன் கலவையிலிருந்து ["KA எண்ணெய்"; K-கீட்டோன், A-ஆல்கஹால்) தற்போது தயாரிக்கப்படுகின்றது. "KA எண்ணெய்" பலபடி வழிமுறையில் நைட்ரிக் அமிலத்தால் உயிர்வளியேற்றம் செய்யப்படுவதால் அடிபிக் அமிலம் கிடைக்கிறது. வினையின் ஆரம்பக் கட்டத்தில் சைக்ளோஹெக்சனோல் கீட்டோனாக மாற்றப்படும்போது நைட்டிரஸ் அமிலம் வெளிபடுகிறது:
HOC6H11 + HNO3 → OC6H10 + HNO2 + H2O
இவ்விதம் நடைபெறும் பல்வேறு வினைகளில், சைக்ளோஹெக்சனோன் நைட்ரசோ (-N=O) சேர்மமாக மாற்றப்பட்டு, C-C பிணைப்பு பிளவுறும் நிலையை உருவாக்குகிறது:
↑Gaivoronskii, A. N.; Granzhan, V. A. (2005), "Solubility of Adipic Acid in Organic Solvents and Water", Russian Journal of Applied Chemistry, 78 (3): 404–08, doi:10.1007/s11167-005-0305-0
↑ 3.03.1Musser, M. T. (2005), "Adipic Acid", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a01+269