அடையாறு புற்றுநோய் மையம்
புற்றுநோய் நிறுவனம் அல்லது அடையாறு புற்றுநோய் மையம் (Adyar Cancer Institute) எனப்படும் மருத்துவ நிறுவனம் இந்தியாவின் சென்னை மாநகரில், அடையாறில் அமைந்துள்ளது.[1] இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1952, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது.[2] இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார். 1974ஆம் ஆண்டு இந்நிறுவனம் மண்டல புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனமாகவும் பின்னர் தேசிய அளவில் தன்னாட்சி புற்று நோய் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு, நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நடுவண் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்நிறுவனத்திற்கு சிறந்த மையம் எனும் தரத்தினை வழங்கியுள்ளது.[3][4] கல்விபுலம்இந்த புற்றுநோய் நிறுவனம் இந்தியாவின் மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோயின் பல்வேறு துணைப் பிரிவுகளில் பட்டங்களை வழங்கும் முதல் மருத்துவப் பள்ளியாகும்.[5][6][7] இந்த நிறுவனம் எம். டி. (ரேடியோதெரபி), டி.எம் (மருத்துவ புற்றுநோயியல்), எம்.சி.எச். (அறுவை சிகிச்சை) மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிற பட்டயம் மற்றும் ஆய்வுநிதித் திட்டங்களை நடத்தி வருகிறது.[8] மருத்துவ இயற்பியல், மருத்துவ-புற்றுநோய் மற்றும் மூலக்கூறு புற்றுநோயியல் ஆகிய துறைகளில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களுக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சிக்காக இந்த நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என இரு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுள்ளது.[9][10][11] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia