அட்சிங்கிமாரி
அட்சிங்கிமாரி (Hatsingimari), இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் அமைந்த தெற்கு சல்மாரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் கிராம ஊராட்சியும் ஆகும். இது அசாம் மாநிலத் தலைநகரான திஸ்பூருக்கு தென்கிழக்கே 234 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது துப்ரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. தெற்கு சல்மாரா மாவட்டம் 9 பிப்ரவரி 2016 இல் நிறுவப்பட்டது. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அட்சிங்கிமாரி கிராம ஊராட்சியின் எழுத்தறிவு 77.73% ஆக இருந்தது. சனவரி 26, 2016 இல் அசாமின் முதலமைச்சர் தருண் கோகய் தென் சல்மாரா-மன்காசர் உட்பட நான்கு மாவட்டங்களை நிருவாகத் தலைமையிடமாக அறிவித்தார்.[1] சொற்பிறப்பியல்அத்சிங்கிமாரி அத் மற்றும் சிங்கிமாரி எனும் இரண்டு சொற்களைக் கொண்டது. அத் என்பதற்கு வாரந்திரச் சந்தை என்று பொருள். சிங்கிமாரி என்பதற்கு ஆற்றில் கெளிறு மீன்களைப் பிடித்தல் என்று பொருள். புவியியல்அத்சிங்கிமாரி அசாமின் தூர-மேற்கில் அமைந்துள்ளது. இதன் தெற்கில் மன்காசார் நகரமும், மேற்கில் பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறான ஜிஞ்சிராம் ஆறு பாய்கிறது. மேலும் கிழக்கில் இம்மாவட்டம் மேகாலயா மாநிலத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது இந்தியா-வங்காளதேசம் எல்லையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia