அட்சின்சோனைட்டு

அட்சின்சோனைட்டு
Hutchinsonite
பெரு நாட்டின் கியுருவில்கா சுரங்கத்தில் கிடைத்த அட்சின்சோனைட்டு. அளவு: 4.5×4.4×2.2 செ.மீ
பொதுவானாவை
வகைசல்போவுப்பு கனிமம்
வேதி வாய்பாடு(Tl,Pb)2As5S9
இனங்காணல்
நிறம்சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு
படிக இயல்புஊசி வடிவ படிகங்கள்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்பு{100} தெளிவு
முறிவுசிறிய சங்குருவ துண்டுகளாக உடையும் தன்மை கொண்டது
மோவின் அளவுகோல் வலிமை1.5–2
மிளிர்வுதுணை உலோகம்
கீற்றுவண்ணம்சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும் மற்றும் ஒளிபுகாது
ஒப்படர்த்தி4.6
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 3.078
nβ = 3.176
nγ = 3.188; 2V = 37°
இரட்டை ஒளிவிலகல்δ = 0.110
மேற்கோள்கள்[1][2][3]

அட்சின்சோனைட்டு (Hutchinsonite) என்பது (Tl,Pb)2As5S9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாலியம், ஆர்சனிக், ஈயம் ஆகிய தனிமங்களின் சல்போவுப்புக் கனிமம் என்றும் ஓர் அரிய நீர்வெப்பக்கனிமம் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள்.

1904 ஆம் ஆண்டு முதன்முதலில் சுவிட்சர்லாந்து நாட்டின் பின்னெண்டால் பள்ளத்தாக்கில் இத்தனிமம் கண்டறியப்பட்டது. 1866 முதல் 1937 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த கேம்பிரிட்சை சேர்ந்த கனிமவியலாளர் ஆர்தர் அட்சின்சன் பெயரே கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்சின்சோனைட்டு கனிமத்தை Hut[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. Handbook of Mineralogy
  2. Hutchinsonite at Mindat.org
  3. Hutchinsonite at Webmineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

மேலும் படிக்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya