கிண்டி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சி.என். அண்ணாதுரை அவர்களின் சிலை
உருவாக்கம்
1978 செப்டம்பர் 4 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகச் சட்டம் 1978 (தமிழ்நாடு சட்டம் 30, 1978) -இன் மூலமாக தமிழ்நாடு அரசு' அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை (முந்தைய பெயர் - அண்ணா பல்கலைக்கழகம்) உருவாக்கியது.
புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமானது முந்தைய சென்னை பல்கலைக் கழகத்தின் பிரிவுகளான பொறியியல் கல்லுாரி, கிண்டி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, மற்றும் சென்னை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லுாரிகளாகின. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரை் சி. என். அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டது.
1982 ஆம் ஆண்டில் பெயரில் இருந்த “பேரறிஞர்“ மற்றும் “தொழில்நுட்பம்“ ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக் கழகம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.[4]
மறு உருவாக்கம்
2001: 2001 ஆம் ஆண்டில், அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்தம் 2001-இன் கீழ், அண்ணா பல்கலைக்கழகம் ஒரு இணைப்பு ஏற்படுத்தக்கூடிய பல்கலைக்கழகமாக மாறியது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுாரிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் இணைக்கப்பட்ட கல்லுாரிகளில், ஆறு அரசு பொறியியல் கல்லுாரிகளும், மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லுாரிகளும் 426 சுயநிதி பொறியியல் கல்லுாரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. [சான்று தேவை]
2011: 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியில் இந்தப் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஒன்றிணைக்க ஒரு சட்ட மசோதா நிறைவேறியது. இருப்பினும், தனித்தனியான பல்கலைக்கழகங்கள் இதுவரை செயல்பட்டு வந்தன.[6]
2012: ஆகத்து 2012 இலிருந்து, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக கல்லுாரி ஆகிய அனைத்தும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டன. இப்போது அவை பின்வருமாறு அழைக்கப்படுகின்றன. :
முன்னதாக அழைக்கப்பட்ட பெயர் (ஆகத்து 2012-க்கு முன்னர்)
தற்போது அழைக்கப்படுவது (ஆகத்து 2012-க்குப் பிறகு)
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (AUT)
அண்ணா பல்கலைக்கழகம் - மண்டல அலுவலகம் (AU-RO)
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (AUT) - பல்கலைக்கழக வளாகம் (அல்லது) பொறியயில் கல்லுாரி
அண்ணா பல்கலைக்கழகம் - மண்டல வளாகம் (அல்லது) பொறியியல் கல்லுாரி
மேற்கோள்கள்
↑"VC's Desk". annauniv.edu. Archived from the original on 7 ஜூலை 2013. Retrieved 5 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)