அதிசய உலகம்
அதிசய உலகம் (Adhisaya Ulagam) 2012 ஆம் ஆண்டு சக்தி ஸ்காட் இயக்கத்தில், ஆர். பானுசித்ரா ஆகியோரின் தயாரிப்பில்[1], லிவிங்ஸ்டன் மற்றும் ஸ்ரீ லட்சுமி நடிப்பில் வெளியான அறிவியல் புனைவு தமிழ் திரைப்படம்[2]. டைனோசர்களை இயங்குபடம் முறையில் (3டி) முப்பரிமாணத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தி தயாரிக்கப்பட்ட முதல் இந்தியத் தமிழ் திரைப்படம்[3][4][5][6][7][8]. கதைச்சுருக்கம்விஞ்ஞானி நீலகண்டன் (லிவிங்ஸ்டன்) காலப் பயணம் செய்ய உதவும் கால இயந்திரம் ஒன்றைப் புதிதாக உருவாக்குகிறார். அதன் மூலம் காலத்தில் பின்னோக்கியோ, முன்பாகவோ செல்ல இயலும். வர்ஷா (ஸ்ரீ லட்சுமி என். நாயர்) மற்றும் விகாஸ் (பிருத்வி) இருவரும் நீலகண்டனின் பேரக்குழந்தைகள். நீலகண்டன் இல்லாதபோது ஆய்வகத்திற்குள் வரும் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது வர்ஷா எறியும் பந்து கால இயந்திரத்தில் பட்டு இயந்திரம் தானே இயங்கத் தொடங்குகிறது. அப்போது அறைக்குள் வரும் நீலகண்டன் நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்து இயந்திரத்தை நிறுத்த முனைகிறார்.ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட நீலகண்டன் மற்றும் அவரது இரு பேரக்குழந்தைகள் மூவரும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் செல்கின்றனர். அவர்கள் டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குச் செல்கின்றனர். டைனோசர்கள் மற்றும் அக்காலத்தில் வாழ்ந்த பல விதமான விலங்குகளைக் காண்கின்றனர். அவர்களுக்கு ஆச்சர்யமும் பயமும் கலந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. அவர்கள் தற்போதைய காலத்திற்குத் திரும்ப முயற்சிக்கின்றனர். ஆனால் கால இயந்திரம் செயல்பட மின்சாரம் அவசியம். ஆனால் அவர்கள் இருப்பதோ மின்சாரம் கண்டறியப்படாத காலம். தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை சமாளித்து அவர்கள் தற்போதைய காலத்திற்கு எப்படி மீண்டும் வந்தனர் என்பது மீதிக்கதை. நடிகர்கள்
தயாரிப்பு2012 ஆம் ஆண்டு 3டி தொழில்நுட்பத்தில் வெளியான அம்புலி திரைப்படத்திற்குப் பிறகு 'அதிசய உலகம்' அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது [9]. இத்திரைப்படம் டூயல் லென்ஸ் பானாசோனிக் 3டி ஒளிப்பதிவுக் கருவியின் மூலம் படம் பிடிக்கப்பட்டது.[10]. இத்திரைப்படத்தில் டைனோசர்கள் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்குபடம் முறையில் படமாக்கப்பட்டது.[11]. பரிந்துரைமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia