அதியமான் கோட்டை சோமேசுவரர் கோயில்அதியமான் கோட்டை சோமேசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் உள்ள சிவன் கோயிலாகும்.[1] அதியமான் கோட்டையில் உள்ள கோயில்களில் பழமையானது இக்கோயிலாகும். கோயிலின் வரலாறுநுளம்பர் கட்டிய பல கோயில்களில் சோமேஸ்வரர் கோயில் குறிப்பிடத்தக்கது. மகேந்திர நுளம்பன் காலத்தில் இக்கோயிலின் இறைவன் மயீந்தீசுவரமுடையார் என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டுகிறார். இந்த செங்கற்தளி. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் திருவுண்ணாழி, அர்த்த மண்டபம் ஆகிய ஆகிய இரு உறுப்புகளை மட்டும் கொண்டு எளியதாக உள்ளது. கோயில் இறைவன் லிங்கவடிவில் உள்ளார். இக்கோயிலில் அம்மனுக்கு கோயில் இல்லை. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் இங்கு உள்ள சூரியக்கல் ஆகும். இக்கல் கோயிலின் வாயிலுக்கு சில மீட்டர் தொலைவில் கல்லால் அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட வளைவே சூரியக் கல் ஆகும். இது தோராயமாக மூன்றடி உயரமுடையதாக உள்ளது. குறிப்பிட்ட நாளில் மாலை நேரத்தில் இந்த வளைவில் புகும் சூரியக் கதிர்கள் கோயிலின் உள்ளே உள்ள சிவலிங்கதிதன்மீது படுவதுவே இதன் சிறப்பு. இக்கோவிலின் இரண்டு தொங்கும் தூண்கள் மற்றொரு சிறப்பு.[2][3][4] இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia