அத்தி மரச்சிலைகள்

அத்தி மரச்சிலைகள் என்பவை அத்தி மரத்தினால் செய்யப்பட்ட சிலைகள் ஆகும். தமிழ்நாட்டின் பழைமையான இந்துக் கோயில்களில் இச்சிலைகள் காணப்படுகின்றன.[1][2] இந்து சமயத்தில் அத்தி ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரமாகக் கொள்ளப்படுகிறது. இந்துக்கள் இம்மரத்தை இன்றும் வணங்குகிறார்கள். அத்தி மரத்தில் கடவுள் சிலை வடிப்பதை சைவ, மற்றும் வைணவ ஆகமங்கள் அனுமதிக்கின்றன.

அத்தி தலமரம்

திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

அத்தி மரச்சிலைகள் சில

  • திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு மகா தேவி அகில புவன ஜெகன்மாதா ஆத்ம தேவி படவேடு மகாமாயா ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனது....
  • உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
  • புதுவைக்கு அடுத்த வீரம் பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரம் செங்கேணி அம்மன் சிலையாக வடித்து வழிபடுகிறார்கள். இவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றது.
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதாகும். இங்கு தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாளை அத்திவரதர் என்றே அழைக்கிறார்கள். இந்த அத்திமரச்சிலை குளத்தின் அடியில் மூழ்கியிருக்கும். நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருமாளை குளத்துக்கு வெளியே எழுந்தருள செய்து பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார் (2019) ((((ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17வரை)))). பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.
  • திருமலையில் (திருப்பதி) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார்.
  • வானமுட்டிப் பெருமாள் ஆலயம் (கோடிகாத்தி) மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு 15 அடி உயரத்தில் சிலையாக வடிக்கப்பட்டு சங்கு, சக்கரம், கதை, அபயயசீதம் ஏந்தி மார்பில் மகாலட்சுமி விளங்க சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வ ரூபமாக இருந்ததால் ‘வானமுட்டிப் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இக்கிராமத்தின் இயற்பெயர் பாப விமோசனபுரம் என்பதே ஆகும்.
நாகப்பட்டினம் மாவட்டம், ஸ்ரீவிஸ்வரூப அத்திவிநாயகர் 32 அடியில் அத்திமரத்தால் செய்யப்பட்டு வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று நகர்வலமும்,பிற நாட்களில் சங்கடஹரசதுர்த்தி அன்று மட்டும் முழுதரிசனமும் தருகிறார்.

பிற சிறப்புகள்

அத்தி ஆறாவது கிரகமான சுக்கிரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ நவக்கிரக கோட்டை ஆலயம், வேலூரை அடுத்த பொன்னை, விநாயகபுரத்தில் நவரக்கிரங்களுக்கு ஒன்பது வகையான கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. இங்கு சுக்கிரனை வணங்குவதற்காக அத்தி மரமும் நடப்பட்டுள்ளது. அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம். இந்துக் கடவுளான தத்தாத்திரேயர் அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் கடைசி வரையில் பிரியாமல் இருப்பதற்கும் வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வர நல்ல பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.

உள்ளிணைப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya