அத்யாரோபம்

அத்யாரோபம் என்பது சமசுகிருத மொழியில் உண்மையான ஒரு பொருள் மீது வேறு ஒரு பொருளை ஏற்றி வைத்தல் ஆகும். (உண்மையான ஒரு பொருளை வேறு ஒரு பொருளாக காண்பது-மங்கிய இருளில் கயிற்றை பாம்பு என காணுதல்). இதனை அத்யாசம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்யாரோபம் அல்லது அத்யாசம் எனும் சொற்கள் சமசுகிருத மொழியில் பரி பாக்ஷை (மறைமுகமாக உணர்த்தும் சொற்கள்) ஆகும். மங்கிய இருளிலே, கயிற்றின் உருவமானது சரியாக தென்படுவதில்லை. அப்பொழுது அறியாமையால், கயிற்றின் மீது பாம்பை ஏற்றிக் கூறுவது போல, பிரம்ம வஸ்துவின் தன்மையை சரியாக அறிந்து கொள்ளாமல், அறியாமையால் (அஞ்ஞானத்தால்) பிரம்மத்தின் மீது இந்த உலகத்தை ஏற்றிக் கூறுவதுதான் `அத்யாரோபம்` ஆகும். அவ்வாறு பொய்யாக பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்த உலகத்தை இறக்கி வைக்கும் (நீக்கும்) முறைக்கு அபவாதம் என்பர்.

இதனையும் காண்க

உசாத்துணை

  • வேதாந்த சாரம், நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya