அந்தக்கரணம்அந்தக்கரணம் கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே அந்தக்கரணம் என்று வேதவேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது.[1][2][3] அந்தக்கரணமானது மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிறது. `இது இவ்வாறு, அவ்வாறு அல்ல` என்று பொருளை (வஸ்து) குறித்து உறுதியான அறிவை (ஞானத்தை) ஏற்படுத்தும் அந்தகரணத்தின் செயல்தான் புத்தியாகும். மனமானது சங்கல்பம் மற்றும் விகல்பம் ஆகியவைகளின் தன்மையாகும். சங்கல்பம் எனில் எண்ணுதல், சிந்தித்தல் முதலியவைகளாகும். விகல்பம் எனில் சந்தேகப்படுதல், ஐயப்படுதல் ஆகும். அந்தகரணத்தின் மாறுதல்கள் ஒரு விசயத்தைக் குறித்து அல்லது ஒரு செயலைக் குறித்து இத்தன்மையினால் எழும் போது அதனை மனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மனம் மற்றும் புத்தி எனும் இந்த இரண்டிலேயே சித்தமும் அகங்காரமும் அடங்கியுள்ளன. சித்தம் என்பது புத்தியிலும், அகங்காரமானது மனதிலும் அடங்கியுள்ளது. அனுசந்தானம் எனில் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது ஆகும். ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வது சித்தத்தின் முக்கியமான இலக்கணமாகும். அகங்காரம் எனப்படுவது `தான்` `தன்னுடைய` என்று எண்ணமே அகங்காரம் எனப்படும். உதவி நூல்
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia