அந்தக் கழுதை இந்தக் கழுதை

அந்தக் கழுதை இந்தக் கழுதை என்பது சிறுவர்கள் குழுவாக விளையாடும் ஒருவகையான விளையாட்டு ஆகும். இது, தாய்மார் அல்லது குழுத்தலைவர்-ஒருவர் குழுவில் இருக்கும் ஒரு குழந்தையின் கண்ணைப் பொத்தி ஆளைக் காட்டச் சொல்லும் விளையாட்டு ஆகும்.

பொத்துபவர் பாடும் உரைப்பாட்டு

அந்தக் கழுதை, இந்தக் கழுதை
மல்லிகா (விளையாடுவோரில் ஒருவர் பெயராக இருக்கும்) கழுதை
எங்கே போயிற்று

கண் பொத்தப்பட்டிருக்கும் குழந்தை மல்லிகா போன திசையைக் காட்டவேண்டும். காட்டிய திசை சரி ஆயின் மல்லிகா கண் பொத்தப்படும். தவறு ஆயின் மீண்டும் பொத்தப்பட்டவர் கண்ணே பொத்தப்படும். இவ்வாறு ஆட்டம் தொடரும்.

மேலும் பார்க்க

உசாத்துணை

  • இரா பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya