அந்தூரியம்
அந்தூரியம் (/[invalid input: 'icon']ænˈθjuːriəm/;[1]) ஏரேசியேக் குடும்பத்தைதைச் சேர்ந்த சுமார் 600-800 உபகுலவகைகளைக் கொண்ட பெரிய இனமாகும். இது மடலிப் பூந்துணர் வகைக்குரியது. வளரியல்புஅந்தூரியம், என்றும் பசுமையான செடியாக, ஏறியாக, எனப் பல்வேறு வகையில் வளரக்கூடியது. நிலம்படரியாகவும் அரைஏறித்தாவரமாகவும் என பல்வேறு நிலவாழ்க்கைக்குரிய வாழியல்புகளைக் கொண்டது. சில பாறைகளில் வளர்பவையாகக் காணப்படும். இவற்றின் தண்டுகள் 15 முதல்30 cm வரை குறுகியததிலிருந்து நீண்டதாயிருக்கும். தண்டின் இறுதியில் காணப்படும் தனியிலை வேறுபட்ட வடிவங்களில் காணப்படலாம். பூத்தல் மற்றும் காய்த்தல்அந்தூரியம் 3மி.மீ வரையான அளவுடைய சிறிய பூக்களைக் கொண்டது. பூக்கள் சாற்றுத்தன்மையான பாளையின் நெருக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். செய்கைமுறைஅந்தூரியம் வீடுகளில் உள்ளகத் தாவரமாகவும் வெளிச்சூழலில் மெல்லியதான நிழல் படுத்தப்பட்ட சூழலில் தரையிலும் சாடிகளிலும் வளர்க்கப்படக் கூடியது. அந்தூரியம் கிரிஸ்ராலியம் அதனது கடும்பச்சையான, பெரிய, மினுக்கமுள்ள இலைக்காகவும் வெள்ளி நிறமுள்ள நரம்புகளுக்கும் பிரபல்லியமானது. படத்தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia