அனத்தியால்
அனத்தியால் (Hnahthial), வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள அனத்தியால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சால் நகரத்திற்கு தென்கிழக்கே 157 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. . இது கிழக்கு இமயமலைத் தொடரில் 2,897 மீட்டர் உயரத்தில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,548 குடியிருப்புகள் கொண்ட அனத்தியால் பேரூராட்சியின் மக்கள் தொகை 7,187 ஆகும். அதில் 3,573 ஆண்கள் மற்றும் 3,614 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.18% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1011 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 97.94% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0.07% மற்றும் 98.68% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 0.42%, இசுலாமியர் 0.51%, கிறித்தவர்கள் 0.51%மற்றும் பிற சமயத்தினர் 0.04% வீதம் உள்ளனர். [1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia