| இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தரைப்படை கட்டளையாளர் இளநாயகம் அனில் சவுகான் பிவிஎஸ்எம், யுஒய்எஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம் (Anil Chauhan) என்பவர் இந்தியத் தரைப்படையின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி ஆவார். இவர் 28 செப்டம்பர் 2022 அன்று பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 30 செப்டம்பர் 2022 அன்று பதவியேற்றார்.[1]
லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இராணுவத் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் 2019 செப்டம்பரில் கிழக்கு படைத்தளக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார்.[2][3]
சவுகான் முன்பு இந்தியத் தரைப்படையின் இராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.[4] இவர் முன்னர் இந்திய தரைப்படையின் III படையின் தளபதியாக இருந்தார். இவர் தரைப்படை கட்டளையாளர் அபய் கிருஷ்ணாவிடமிருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.[5][6][7][8][9]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சவுகான், கொல்கத்தா வில்லியம் கோட்டை கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதமி மற்றும் தேராதூன், இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடத்தில் இராணுவ பயிற்சி பெற்றுள்ளார்.[5][8]
பணி
சவுகான் 1981 இல் 11 கூர்க்கா துப்பாக்கி படையினர் பணியில் சேர்ந்தார். இவர் தனது பணியின் போது ஆணையிடுபவராகவும், அறிவுறுத்தும் பணியாளராகவும் மற்றும் அறிவுறுத்தல் வழங்குபவராகவும் பணியாற்றியுள்ளார். சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளைத் திறம்படக் கையாளுவதில் அனுபவம் பெற்றவர்.[5][8] அங்கோலாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.[5][8]
சூலை 2019-ல், மனோஜ் முகுந்த் நரவனேவினைத் தொடர்ந்து கிழக்குக் கட்டளையின் பொது அலுவலராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் ஆகத்து 31 அன்று இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக ஆனார்.[10]
சவுகான் 31 மே 2021 அன்று ஓய்வு பெற்றார்.[11]
பாதுகாப்புப் படைத் தலைவர்
சவுகான் 28 செப்டம்பர், 2022 அன்று பாதுகாப்புப் படைகளின் இரண்டாவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[12]
தனிப்பட்ட வாழ்க்கை
சவுகான், கலைஞரான அனுபமாவை மணந்தார்.[13] இந்த தம்பதிக்கு பிரக்யா என்ற மகள் உள்ளார்.[14]
மரியாதைகள் மற்றும் அலங்காரங்கள்
சவுகானுக்கு, பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விசிட்ட சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.[15][16][17]
தரவரிசை தேதிகள்
மேற்கோள்கள்