அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை![]() ![]() அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை (International Congress of Mathematicians-ICM) என்பது கணிதம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் கணித அறிஞர்கள் ஒன்றுகூடி கருத்தாடி, கட்டுரைகள் படிக்கின்ற மிகப்பெரிய மாநாடாகும். இப்பேரவை அனைத்துலக கணித ஒன்றியத்தினால் (International Mathematical Union) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இப்பேரவைக் கூட்டத்தின் போது சிறந்த கணித அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. வரலாறுஉலக அளவில் சிறந்து விளங்கும் கணித அறிஞர்களை ஒன்று கூட்டி இது போன்ற பேரவை நடத்த வேண்டும் என 1890 -இல் முதல் குரல் எழுப்பியவர்கள் ஃபெலிக்ஸ் கிளைன்(Felix Klein) மற்றும் கியார்கு கேன்ட்டர் என்ற கணித அறிஞர்கள் ஆவர்.[1][2] 1893 -இல் சிகாகோவில் கணித அறிஞர்கள் ஒன்று கூடிய ஒரு பேரவையில் கிளைன் எழுச்சியூட்டக்கூடியவகையில் உரையாற்றி உலகிலுள்ள கணித அறிஞர்கள் ஒன்று கூட வேண்டுகோள் விடுத்தார். முதல் அனைத்துலகக் கணித அறிஞர்கள் பேரவை ஆகத்து - 1897 -ஆம் ஆண்டு சூரிச்சில் கூட்டப்பட்டது. 16 நாடுகளில் இருந்து 208 அறிஞர்கள் ஒன்றுகூடி வெவ்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார்கள். பல்வேறு கருத்துகள் குறித்து வாதித்தனர். அன்றைய கால கட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய கணித அறிஞர்கள் லூகி கிரெமோனா, பெலிக்ஸ் கிளைன், கோட்டா மிட்டாக் லெஃப்லெர், ஆன்ட்ரோ மார்க்கோவ் ஆகியோர் இப்பேரவையில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவார்கள்.[2] வழங்கப்படும் பரிசுகள்இப்பேரவையின் போது சிறந்த கணித அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று விதமான சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவை: நிகழ்வுகள்ஒவ்வொரு பேரவையின் போதும், பேரவைக்கான நிகழ்ச்சி நிரல்கள் வெளியிடப்பட்டு, கணிதத்தில் பல்வேறு தலைப்புகளிலும், பொது விருப்பத்திற்குரிய தலைப்புகளிலும் ஆய்வுரைகள் அளிக்கப்படுகின்றன. சிறந்த கணித அறிஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பேரவை நடைபெற்ற ஆண்டுகள்-நாடுகள்- இடங்களின் பட்டியல்
உசாத்துணைமுனைவர் கே. சீனிவாசராவ் எழுதிய கட்டுரை, அறிவியல் ஒளி, ஆகத்து 2010 இதழ் வெளியிணைப்புகள்
![]() விக்கிமூலமானது பின்வரும் தலைப்பிலான மூல ஆக்கங்களைக் கொண்டுள்ளது: International Congress of Mathematicians
|
Portal di Ensiklopedia Dunia