அன்னா லெத்திசியா பார்பௌல்டு (Anna Laetitia Barbauld, /bɑːrˈboʊld/, அல்லது பிரான்சிய மொழிபோல பார்போ/bɑːrˈboʊ/, திருமணத்திற்கு முன்அய்க்கின்; 20 சூன் 1743 – 9 மார்ச்சு 1825) முதன்மைபெற்ற ஆங்கிலக் கவிதாயினியும் கட்டுரையாளரும் இலக்கிய விமரிசகரும் பதிப்பாசிரியரும் சிறுவர் எழுத்தாளரும் ஆவார்.
"பெண் அறிவாளி" எனப் போற்றப்பட்ட பார்பௌல்டு பல்வேறு துறைகளிலும் எழுதி வந்தார்; பெண்கள் மிக அரிதாகவே தொழில்முறை எழுத்தாளர்களாக இருந்தவொரு காலகட்டத்தில் எழுத்துத் துறையில் பல வெற்றிகளை சாதித்தார். பால்கிரேவ் கலையகத்தில் ஆசிரியையாக சிறப்புக் கவனம் பெற்றார்; சிறுவர்களுக்கான புத்தாக்க எழுத்தாளராகவும் பெயர் பெற்றார். அவரது சிறுவர்களுக்கான தொடக்க நூல்கள் ஓர் நூற்றாண்டுக்கும் மேலாக கற்பித்தலுக்கு முன்மாதிரியாக அமைந்தது.[1] அவரது கட்டுரைகள் பெண்களால் பொதுக்களத்தில் அரசியலில் ஈடுபட முடியும் என்பதை நிலைநிறுத்தியது. எலிசபெத் பெங்கர் போன்றவர்கள் இவரையேப் பின்பற்றினார்கள்.[2] பார்பௌல்டின் இலக்கிய வாழ்வு பிரித்தானிய இலக்கிய வரலாற்றில் பல காலகட்டங்களைத் தாண்டிய ஒன்றாகும்: அவரது படைப்புக்கள் தெளிவையும் மன உணர்வுகளையும் ஒருசேர முன்னிறுத்தின; அவரது கவிதைகள் பிரித்தானிய புனைவிய இலக்கியத்திற்கான அடிக்கலாக அமைந்தன.[3] இலக்கிய விமரிசகராகவும் விளங்கினார். பார்பௌல்டு தொகுத்த பதினெட்டாம் நூற்றாண்டு பிரித்தானிய புதினங்களின் நூற்றிரட்டு இன்றுவரை நெறிமுறையாக விளங்குகின்றது.
பார்பௌல்டு நெப்போலியப் போர்களில் பிரித்தானியாவின் பங்கேற்பை விமரிசித்து எய்ட்டீன் அன்ட்ரெட் இலெவன் (1811) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்; இதற்கு எழுந்த தீய விமரிசனங்களால் மனமுடைந்து அதற்குப் பின் தம் வாழ்க்கையில் எதையுமே வெளியிடவில்லை.[4]பிரெஞ்சுப் புரட்சியின் துவக்க காலங்களில் அவர் ஊக்கமூட்டிய புனைவிய கவிஞர்கள் பலரும் பிற்கால பழமை விரும்பிகளாக அவருக்கு எதிராக எழுதியதும் அவருக்கு அதிர்ச்சியளித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பார்பௌல்டு சிறுவர்களுக்கான கல்விசார் எழுத்தாளராக மட்டுமே அறியப்பட்டார்; இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலும் மறக்கப்பட்டார். 1980களில் பெண்ணியத் திறனாய்வின் எழுச்சியின் பின்னர் அவரது படைப்புக்களில் புதிய ஆர்வம் எழுந்தது. இலக்கிய வரலாற்றில் அவருக்கான சிறப்பிடம் மீட்கப்பட்டது.[5]
மூலங்கள்
தற்போது அறியப்பட்டுள்ள பார்பௌல்டின் வாழ்க்கைப் பற்றி பெரும்பாலும் இரண்டு வாழ்க்கை நினைவுக் குறிப்புகளிலிருந்தே கிடைக்கிறது. முதலாவது 1825இல் அவரது உடன்பிறப்பின் மகள் லூசி அய்க்கின் எழுதியது; இரண்டாவது 1874இல் அவரது உடன்பிறந்தாரது பேத்தி அன்னா லெத்திசியா லெ பிரெடன் எழுதியது. பார்பௌல்டு சிலருக்கு எழுதிய கடிதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் வீட்டு ஆவணங்கள் பலவும் 1940இல் இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியின் விமானப்படை பிரிட்டன் மீது நடத்திய தொடர் குண்டுவீச்சில் தீக்கிரையாயின.[6]
இளமைக்காலம்
பார்பௌல்டின் உடன்பிறப்பு ஜான் அய்க்கின் (பின்னாளில் எடுத்த படம்). இவரும் அன்னாவும் இலக்கியத்தில் கூட்டாளிகளாக இருந்தனர்.
பார்பௌல்டு சூன் 20, 1743இல் கிப்வர்த் ஆர்ட்கோர்ட் என்னுமிடத்தில் லைசெஸ்டர்சையர் கவுன்டியில் ஜேன் மற்றும் ஜான் அய்க்கின் இணையருக்கு மகளாகப் பிறந்தார். ஜேன் அய்க்கினின் தாய்பெயரை இவருக்குச் சூட்டினர். வீட்டில் நான்சி என அழைத்து வந்தனர்.[7] பார்பௌல்டின் தந்தை இங்கிலாந்து திருச்சபையை ஏற்காதவர்கள் நடத்திய பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். தவிரவும் திருச்சபை பொது ஆட்சி முறை (பிரெஸ்பைடேரிய) தேவாலயத்தில் மறைபரப்புநராகவும் இருந்தார்.அவரது வீட்டிலேயே சிறுவர்களுக்கான பள்ளி இயங்கியது. அவரது குடும்பத்தின் வாழ்நிலை வசதியாக இருந்தது. பார்பௌல்டின் தந்தை 1780இல் இறக்கும்போது அவரது சொத்து £2,500க்கும் கூடுதலாக மதிப்பிடப்பட்டது.[8] சிறுவர்களுடனேயே கூடுதலாக ஊடாடியதால் அன்னாவிற்கு ஆண்களின் துறைகள் என அக்காலங்களில் அடையாளப்படுத்தப்பட்ட துறைகளில் ஆர்வம் மிகுந்தது.[9] தாயாருக்கு விருப்பமில்லாவிடினும் தந்தையாரிடம் பிடிவாதம் பிடித்து செவ்வியல் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.[10]இலத்தீன், தொன்ம கிரேக்கம், பிரான்சியம், இத்தாலி மொழி என பல மொழிகளிலும் தேர்ந்தார்.
தமது தம்பி ஜான் அய்க்கின் மீது அளவுகடந்த பாசம் கொண்டிருந்தார். இருவரும் சிறந்த நண்பர்களாக, இலக்கியத் தேடுதல்களில் கூட்டாளிகளாக வாழ்ந்தனர்.[11][12]
1758இல் அன்னாவின் குடும்பம் வாரிங்டனுக்கு குடி பெயர்ந்தது. வாரிங்டன் அகாதமியில் தந்தை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இங்கு இயல் மெய்யியலாளரும் ஒருமைக் கோட்பாட்டாளுருமான சோசப்பு பிரீசிட்லி போன்ற பல புகழ்பெற்ற அறிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இங்கிருந்த அறிவார்ந்தசூழலுக்காக பலரும் "வடக்கிலுள்ள ஏதென்சு" என இந்த அகாதமியைக் குறிப்பிடுகின்றனர்.[13] இக்காலகட்டத்தில் அன்னாவின் அழகாலும் அறிவாலும் ஈர்க்கப்பட்ட பலர் மணம் புரிய முன்வந்தனர்; தன் தாயின் கவலையையும் பொருட்படுத்தாது அன்னா அவற்றை நிராகரித்தார்.[14]
மேற்சான்றுகள்
↑William McCarthy, "Mother of All Discourses: Anna Barbauld's Lessons for Children"; Culturing the Child, 1690–1914: Essays in Memory of Mitzi Myers, ed. Donelle Ruwe. Lanham, MD: The Children's Literature Association and the Scarecrow Press, Inc. (2005).
↑Armstrong, Isobel. "The Gush of the Feminine: How Can we Read Women's Poetry of the Romantic Period?" Romantic Women Writers: Voices and Countervoices, eds Paula R. Feldman and Theresa M. Kelley. Hanover: University Press of New England (1995); Anne K. Mellor. "A Criticism of Their Own: Romantic Women Literary Critics." Questioning Romanticism, ed. John Beer. Baltimore: Johns Hopkins Univ. Press (1995).
↑Anne Janowitz, Women Romantic Poets: Anna Barbauld and Mary Robinson. Tavistock: Northcote House (2003).
↑Anna Letitia Barbauld, Anna Letitia Barbauld: Selected Poetry and Prose, eds. William McCarthy and Elizabeth Kraft. Peterborough: Broadview Press Ltd. (2002), p. 160.
↑William McCarthy, "A 'High-Minded Christian Lady': The Posthumous Reception of Anna Letitia Barbauld." Romanticism and Women Poets: Opening the Doors of Reception, eds. Harriet Kramer Linkin and Stephen C. Behrendt. Lexington: University Press of Kentucky, (1999).
Barbauld, Anna Letitia. Anna Letitia Barbauld: Selected Poetry & Prose. Eds. William McCarthy and Elizabeth Kraft. Peterborough, Ontario: Broadview Press Ltd., 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-55111-241-1.
Barbauld, Anna Letitia. The Poems of Anna Letitia Barbauld. Ed. William McCarthy and Elizabeth Kraft. Athens: University of Georgia Press, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-8203-1528-1.
Le Breton, Anna Letitia. Memoir of Mrs. Barbauld, including Letters and Notices of Her Family and Friends. By her Great Niece Anna Letitia Le Breton. London: George Bell and Sons, 1874.
McCarthy, William. Anna Letitia Barbauld: Voice of the Enlightenment. Baltimore: Johns Hopkins University Press, 2009.
Murch, J. Mrs. Barbauld and her Contemporaries. London: Longman, 1877.
Thackeray, Anne Ritchie. A Book of Sibyls. London: Smith, 1883.
Rodgers, Betsy. Georgian Chronicle: Mrs. Barbauld and Her Family. London: Methuen, 1958.
பிற
Armstrong, Isobel. "The Gush of the Feminine: How Can we Read Women's Poetry of the Romantic Period?" Romantic Women Writers: Voices and Countervoices. Eds. Paula R. Feldman and Theresa M. Kelley. Hanover: University Press of New England, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-87451-724-8
Ellison, Julie. "The Politics of Fancy in the Age of Sensibility." Re-Visioning Romanticism: British Women Writers, 1776–1837. Ed. Carol Shiner Wilson and Joel Haefner. Philadelphia: Univ. of Pennsylvania Press, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8122-1421-5
Guest, Harriet. "Anna Laetitia Barbauld and the Mighty Mothers of Immortal Rome." Small Change: Women, Learning, Patriotism, 1750–1810. Chicago: University of Chicago Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-226-31052-7
McCarthy, William. "A 'High-Minded Christian Lady': The Posthumous Reception of Anna Letitia Barbauld." Romanticism and Women Poets: Opening the Doors of Reception. Eds. Harriet Kramer Linkin and Stephen C. Behrendt. Lexington: University Press of Kentucky, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8131-2107-9
McCarthy, William. "'We Hoped the Woman Was Going to Appear': Repression, Desire, and Gender in Anna Letitia Barbauld's Early Poems." Romantic Women Writers: Voices and Countervoices. Eds. Paula R. Feldman and Theresa M. Kelley. Hanover: Univ. Press of New England, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-87451-724-8
Mellor, Anne K. "A Criticism of Their Own: Romantic Women Literary Critics." Questioning Romanticism. Ed. John Beer. Baltimore: Johns Hopkins Univ. Press, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8018-5052-3
Myers, Mitzi. "Of Mice and Mothers: Mrs. Barbauld's 'New Walk' and Gendered Codes in Children's Literature." Feminine Principles and Women's Experience in American Composition and Rhetoric. Eds. Louise Wetherbee Phelps and Janet Emig. Pittsburgh: University of Pittsburgh Press, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8229-5544-3
Ross, Marlon. "Configurations of Feminine Reform: The Woman Writers and the Tradition of Dissent." Re-visioning Romanticism: British Women Writers, 1776–1837. Eds. Carol Shiner Wilson and Joel Haefner. Philadelphia: University of Pennsylvania Press, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8122-1421-5
Ruwe, Donelle. "Barbauld and the Body-Part Game: Maternal Pedagogy in the Long Eighteenth Century." Mothers in Children's and Young Adult Literature: From the Eighteenth Century to Postfeminism. Eds. Karen Coats and Lisa Rowe Fraustino. University of Mississippi Press, 2016. 27–44.