அன்பில் பி. தர்மலிங்கம்
அன்பில் பி. தர்மலிங்கம் (Anbil P. Dharmalingam), இந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[1] இவர் தமிழக அமைச்சரவையில், அமைச்சராக பணியாற்றியுள்ளார். அரசியல்திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அன்பில் பி. தர்மலிங்கம், 1967இல் திமுக ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தர்மலிங்கம் உள்ளாட்சி நிர்வாக அமைச்சராகவும் மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றினார்.[2][3] 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், வட ஆற்காடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில், தர்மலிங்கமும் மற்ற ஐந்து அமைச்சர்களும் தலைமை தாங்கினர், ஒரு சுயாதீன தமிழகத்தை உருவாக்குவது, திமுகவின் நோக்கம் என்று அறிவித்தார்.[4][5] போட்டியிட்ட தேர்தல்கள்1962 மற்றும் 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், லால்குடி தொகுதியில் இருந்தும், 1971 தேர்தலில், திருச்சிராப்பள்ளி - II தொகுதியிலிருந்தும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8] குடும்பம்இவரது தந்தை பெரியசாமி நாட்டார், தாயார் ஆச்சிக்கண்ணு அம்மையார். மனைவி தங்கப்பொன்னு, இவரது மகன்களான அன்பில் பெரியசாமி மற்றும் அன்பில் பொய்யாமொழி ஆகியோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இருந்து, தமிழக சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளனர்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia