அபிசேக் வினோத்
அபிசேக் வினோத் (Abhishek Vinod) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், மலையாள மொழி படங்களில் தோன்றியுள்ளார். இவர் பல இந்திய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னணி எதிர்மறை பாத்திர நடிகர்களில் ஒருவராவார். இவர் ஒரு வடிவழகராக பணியாற்றிய பிறகு, பி. அமுதவாணன் இயக்கிய படமான வெருளி என்ற படத்தில் காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்தார். அடுத்து ஜீது ஜோசப்பின் பாபனாசம் (2015) திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார். பின்னர் இவர் முன்னணி வேடங்களில் நடித்தார், மேலும் ஸ்கெட்ச் (2018) போன்ற பெரிய தமிழ் படங்களில் தோன்றினார். தொழில்சென்னையில் பிறந்த அபிசேக், கோலா சரசுவதி வைணவ மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மதராசு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 2004 ஆம் ஆண்டில் வடிவழகு துறையில் நுழைந்தார். சென்னையில் விளம்பரங்களுக்கு வடிவழகராக பணிபுரிந்தார். இவர் முதலில் மோகன்லாலுடன் மலையாளத் திரைப்படமான காஸநோவ்வாவில் நடித்தார்.[1][2] பின்னர் இவர் 2010 இல் இனிது இனிது படத்தில் கல்லூரியின் மோசமான மூத்த மாணவர் பாத்திரத்தில் நடித்தார். கமல்ஹாசனின் பாபநாசம் (2015) படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க துணை வேடத்தில் நடித்தார்.கௌதமியின் தம்பி பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி இவருக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத்தந்தது. ஜீது ஜோசப்பிடம் இணை இயக்குநராக அப்படத்தில் பணியாற்றிய இவரது வழிகாட்டியான சுரேஷ் கண்ணன் இவருக்கு அந்த பாத்திரத்தை வழங்கினார். பின்னர் இவர் வெருளி (2017) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். அது இவரது தலைசிறந்த படைப்பாக இருந்தது. என்றாலும் இது திரையரங்குகளில் கவனிக்கப்படாமல் போனது.[3][4][5] 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், விக்ரம் நடித்தஸ்கெட்ச் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார். மேலும் மன்னர் வகையறா படத்தில் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராக நடித்தார்.[6] இவர் ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைவராக ஆண் தேவதை (2018) படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணீ ஆகியோருடன் அப்படத்தில் நடித்தார்.[7] தனிப்பட்ட வாழ்க்கைஅபிசேக் வினோத் சென்னையைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஜூல்ஸ் இடி அமீனை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு அயன் என்ற மகன் உள்ளார்.[8] திரைப்படவியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia