அபூ பக்கர் அல்-பக்தாதி
அபூ பக்கர் அல்-பக்தாதி (Abu Bakr al-Baghdadi, அரபி மொழி: أبو بكر البغدادي; அண். 1971 – 27 அக்டோபர் 2019)[2]) இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆவார்.[3] இவரது இயற்பெயர் இப்ராகிம் அவ்வாத் இப்ராகிம் அலி அல்-பத்ரி ஆகும். இவர் டாக்டர்.இப்ராஹிம் அல்லது அபூ துவா என்றும் அறியப்படுகின்றார்.[4] இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தியதி அபூ பக்கர் அல்-பக்தாதியால் உருவாக்கப்பட்டது. இது முதலில் அல் காயிதா அமைப்பின் ஈராக்கியப் பிரிவாகச் செயற்பட்டது.[5] அமெரிக்கா அரசு 4 அக்டோபர் 2011 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியை சிறப்புக் கவனம் பெற்ற உலகளாவியத் தீவிரவாதி (Specially Designated Global Terrorist) என்று அறிவித்து அவரைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு என அறிவித்தது.[6] கொலைத் தாக்குதல்அக்டோபர் 26, 2005 இல் அமெரிக்கப் போர் விமானங்கள் இவர் தங்கியிருக்கலாம் என்ற ஊகத்தில், சிரியா எல்லை அருகே குண்டு வீசி இவரைக் கொல்ல முயன்றன.[7] இவர் அல் காயிதாவின் மூத்த நபராக அடையாளம் காணப்பட்டிருந்த அச்சமயத்தில், சிரியா எல்லையில் தீவிரவாதப் பணிகளை மேற்கொள்வதும், சவூதி அரேபியா மற்றும் சிரியாவிலிருந்து போராளிகளைக் தந்திரமாக ஈராக்கினுள் ஊடுருவ வைப்பதும் இவரது பணியாக இருந்தது.[7] மேலும் அத்தாக்குதலின் போது அபூ பக்கர் அல்-பக்தாதி வீட்டினுள் தான் இருந்தார் என்றும், ஆனால் அவரது உடல் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.[7] கைது அறிக்கைடிசம்பர் 2, 2012 அன்று அபூ பக்கர் அல்-பக்தாதியைக் கைது செய்திருப்பதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.[8][9] ஆனால் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஈராக்கின் உள்துறை அமைச்சர் இத்தகவலை நிராகரித்து, கைது செய்யப்பட்டிருப்பது அபூ பக்கர் அல்-பக்தாதி அல்ல என்றார்.[10][11] மரணம்வடமேற்கு சிரியாவின் இதுலிபு மாகாணத்தின் இத்லிப் நகரத்திற்கு அருகே ஒரு பதுங்கு குழியில் ஒளிந்திருந்த அபு பக்கர் அல்-பக்தாதியை, 27 அக்டோபர் 2019 அன்று அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதல்களில் இறந்ததாக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப் அறிவித்தார்.[12][13][14] தொடர்புடைய கட்டுரைகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia