அப்சல் குஞ்ச்
அப்சல் குஞ்ச் (Afzal Gunj) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின், ஐதராபாத்தின் முசி ஆற்றுக்கு அருகிலுள்ள பழைய நகரத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் இருப்பதால் உள்ளூர் போக்குவரத்தின் மையமாக இது திகழ்கிறது. பேருந்து நிலையம் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சேவைகளை வழங்குகிறது. [1] புகழ்பெற்ற உஸ்மானியா பொது மருத்துவமனை, மாநில மத்திய நூலகம் , தெலங்காணா உயர் நீதிமன்றம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. சார்மினார் மற்றும் அருகிலுள்ள நினைவுச்சின்னங்களான, புராணி அவேலி, சலார் ஜங் அருங்காட்சியகம் போன்ற பிற அடையாளங்களும் அருகிலேயே அமைந்துள்ளன. வரலாறுஐந்தாவது நிசாம், அப்சல் அத்-தௌலா, தானிய மற்றும் வணிகர்களுக்காக இந்த நிலத்தை பரிசளித்தார். இந்த இடத்திற்கு அவரது பெயரிடப்பட்டது. மோஸ்ஸாம் ஜாஹி சந்தை, சித்தி அம்பர் பஜார், உஸ்மங்குஞ்ச் சந்தை, பேகம் பஜார், மற்றும் பூல் பாக் போன்ற சந்தைகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia