அமர்கந்தாக்
அமர்கந்தாக் (Amarkantak) என்பது இந்தியாவின் அனுப்பூரிலுள்ள நகர பஞ்சாயத்து மற்றும் சுற்றுலா நகரம் ஆகும். அமர்கந்தாக் பகுதி என்பது ஒரு தனித்துவமான இயற்கை பாரம்பரியப் பகுதி ஆகும் மற்றும் விந்தியா மற்றும் சாத்பூரா மலைத்தொடர்கள், மைக்கால் மலைகளை சந்திக்கும் முக்கியப் புள்ளியாகும். இப்பகுதியில் தான் நர்மதை ஆறு, சோன் ஆறு மற்றும் சோயிலா ஆறு தோன்றும் இடம் ஆகும். 15-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கவிஞரான கபீர் இந்த நகரத்தில் உள்ள கபீர் மேடையில் தான் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது[1]. சொற்பிறப்பியல்அமர்கந்தாக் என்பது இரு சமக்கிருதச் சொற்களான அமரா (அழிவில்லாத) மற்றும் கந்தகா (தடை) என்பதின் சேர்க்கை ஆகும். கவிஞர் காளிதாசர் இந்த இடத்தை அம்ரகுதா என்று குறிப்பிட்டிருந்தார், பின்பு இது அமர்கந்தாக் ஆனது[2]. இடவமைப்பு![]() நர்மதா குந்த் கோவில்கள், நர்மதா ஆற்றின் பிறப்பிடம் அமர்கந்தாக் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது, 22.67°N 81.75°E. இதன் சராசரி உயரம் 1048 மீட்ட்கள் (3438 அடி). இரேவா, சாச்டால், அனுப்பூர், சபல்பூர், கத்நி மற்றும் பெந்ரா வழியாக செல்லும் சாலைகள் இந்த இடத்தை இணைக்கின்றன. இதன் அருகில் உள்ள புகைவண்டி நிலையங்கள் அனுப்பூர் மற்றும் பெந்ரா சாலை கியோஞ்சி வழியாக 43 கி.மீ மற்றும் சலேச்வர் வழியாக 28 கி.மீ தூரம் ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் சபல்பூர் 240 கி.மீ தூரம், இங்கிருந்து தில்லி மற்றும் மும்பைக்கு தினமும் விமான சேவை உள்ளது[3] [4]. மக்கள் தொகை![]() 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி[5] அமர்கந்தாகின் மக்கள் தொகை 7074. மக்கள் தொகையில் 54% ஆண்களும் 46% பெண்களும் இருக்கின்றனர். அமர்கந்தாகின் சராசரி எழுத்தறிவு 68% ஆகும், இது தேசியச் சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும். 62% ஆண்களும் 21% பெண்களும் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் 6 வயதுக்கும் கீழ்யுள்ளவர்கள். தாவரங்கள் மற்றும் விலங்குகள்![]() அமர்கந்தாக் நகரத்தில் பல அரிய வகையான மருத்துவ குணமிக்க தாவரங்களால் சுற்றியுள்ளன[6]. அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம், அமர்கந்தாக் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் பிலாசுப்பூர் செல்லும் வழியில் உள்ளது[7]. 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இச்சரணலாயம் ஒரு புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டது. 557.55 கி.மீ2 பரப்பளவை வனப்பகுதியாகப் பெற்றுள்ள இப்பூங்கா மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் கன்கா புலிகள் காப்பகத்துடன்[8] கன்கா-அச்சனக்மர் மலைப்பாங்கான பாதையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மரங்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேகராதூனில் உள்ள காடுகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுரைப்படி, 1968-ல் வெப்பமண்டல பைன் மரங்கள் பயிரிடப்பட்டன. உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியின் மூலம் இந்த சால் மரங்களை அழித்து இந்த செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலுள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சர்சையை ஏற்படுத்தியதால், இறுதியாக வெப்பமண்டல பைன் மரங்கள் பயிரிடும் செயல்திட்டம் ஒழிக்கப்பட்டது[9]. கல்வி நிறுவனங்கள்இந்திராகாந்தி தேசிய மலைவாழ் பலகலைக்கழக சட்டத்தின் படி 2007-ல்[10], ஒரு மத்திய பல்கலைகழகம் நிறுவப்பட்டது. மலைவாழ் சமூகத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் மலைவாழ் மக்கள் தொகையின் உயர் கல்வி குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்க இப்பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia