அமிலநீக்கி![]() அமிலநீக்கி ( antacid) என்பது வயிற்றின் அமிலத்தன்மையை சமன்செய்யும் ஒரு பொருளாகும். மேலும் இப்பொருள் நெஞ்சு எரிச்சலையும் நீக்கி விடுவிக்கிறது. மருத்துவப் பயன்கள்மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் இல்லாமலேயே கடைகளில் வாங்கிக் கொள்ள முடிகின்ற அமிலநீக்கிகள் வாய்வழியாக உட்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது ஏற்படும் நெஞ்செரிவு , இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகிய காரணங்களுக்காக இதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அறிகுறிசார்ந்த சிகிச்சைகளுக்கு வேண்டுமானால் அமிலநீக்கியைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள்.[1] எச்2 ஏற்பி எதிர்ப்பிகள் அல்லது புரோட்டான் குழல் தடுப்பிகள் முதலான அமிலம் குறைக்கும் மருந்துகளில் இருந்து அமிலநீக்கிகள் வேறுபட்டவையாகும். இவை வயிற்றுப் புண்களுக்கு காரணமான எலிக்கோபேக்டர் பைலோரி பாக்டீரியாக்களைக் கொல்வதில்லை.[1] பக்க விளைவுகள்மக்னீசியம் வகை அமிலநீக்கிகளால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம், கால்சியம் அல்லது அலுமினியம் வகை அமிலநீக்கிகள் மலச்சிக்கலையும் , அரிதாக, நீண்ட கால பயன்பாட்டினால் சிறுநீரகத்தில் கற்களையும் ஏற்படுத்தலாம். அலுமினிய வகை அமிலநீக்கிகள் நீண்ட கால பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்தான எலும்புப்புரை நோயை உண்டாக்கிவிடலாம்.[2] அமிலநீக்கியின் வினைவழிமுறைஅமிலநீக்கிகளில் கார அயனிகளைக் கொண்டிருப்பதால் அவை வயிற்றிலுள்ள அமிலத்தை நேரடியாக நடுநிலையாக்கம் செய்கின்றன.[3] நன்றாக அறியப்பட்ட சில அமிலநீக்கி வகைகள்கார அயனிகளைக் கொண்ட வேதி உப்புகளே எதிரயனியாகின்ற அமிலநீக்கிகளாகும். பொதுவாக பைகார்பனேட்டுகள் கார அயனிகளாக பயன்படுத்தப்படும் ஆனால் ஐதராக்சைடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia