அமிலா அபோன்சாமல்மீஜ் அமிலா அபோன்சா (Malmeege Amila Aponso) பிறப்பு 23 ஜூன் 1993) பொதுவாக அமிலா அப்போன்சோ என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் இலங்கை தேசிய அணி தவிர ரக்மா துடுப்பாட்ட சங்கம், இலங்கை அ அணி, இலங்கை எமெர்ஜிங் (வளர்ந்து வரும் அணி), 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை அணி, 2 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை அணி மற்றும் புனித செபஸ்தியான் கல்லூரி அணி ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். ராகமா துடுப்பாட்ட சங்கத்திற்காக முதல் தர துடுப்பாட்டப் போடிகளில் விளையாடுகிறார் . இவர் மொரட்டுவாவின் புனித செபஸ்தியான் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.[1] உள்ளூர் போட்டிகள்2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் தம்புலா துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.[2] அதே ஆண்டில் நடைபெற்ற இலங்கை துடுப்பாட்ட லீக்கிலும் இவர் இதே அணி சார்பாக விளையாடினார்.[3] ரகாமா துடுப்பாட்ட சங்கம் சார்பாக 2018–19 பிரீமியர் லீக் போட்டியில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 47 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[4] சர்வதேச போட்டிகள்2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 31 இலக்குகளை 20.9 எனும் பந்துவீச்சு சராசரியோடு எடுத்தார். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இலங்கை அ அணியில் இவர் இடம் பெற்றார். மேலும் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். இருந்தபோதிலும் பல சிறப்பான பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியில் இருந்ததனால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ரங்கனா ஹெராத் வரையறுக்கப்பட்ட துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றனைத் தொடர்ந்து இவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆகஸ்ட் 2016 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடருக்கான இலங்கைத் துடுப்பாட்ட அணியில் இவர் சேர்க்கப்பட்டார்.[5] 21 ஆகஸ்ட் 2016 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஆரோன் பிஞ்சை தனது முதல் சர்வதேச இலக்காக வீழ்த்தினார் [6] இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, ஆனால் வர்ணனையாளர்கள் அப்போன்சோவின் பந்துவீச்சு செயல்திறனைப் பாராட்டினர்.[7] 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை துடுப்பாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியினை தோற்கடித்த இலங்கைத் துடுப்பாட்ட அணியில் இவர் விளையாடினார்.[8] அந்தப் போட்டித் தொடரில் 12 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார்.[9] பிப்ரவரி 2018 இல், வாங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் பன்னாட்டு இருபது 20 அணியில் இவர் இடம் பெற்றார்.[10] 18 பிப்ரவரி 2018 வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலங்கைத் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் அறிமுகமனார். தமீம் இக்பாலை தனது முதல் பன்னாட்டு இருபது20 இலக்காக் கைப்பற்ற்ரினார் [11] மே 2018 இல், 2018–19 ஆண்டிற்கான இலங்கை துடுப்பாட்ட வாரியத்தினால் தேசிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட 33 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார்.[12][13] நவம்பர் 2019 இல், வாங்காளதேசத்தில் நடைபெறும் 2019 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான இலங்கையின் அணியில் இவர் இடம் பெற்றார்.[14] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia