அமைச்சர்

அமைச்சர் எனப்படுபவர், தேசிய அல்லது பிரதேச அரசுகளில் குறித்த துறைகளுக்குப் பொறுப்பான பதவியை வகிக்கும் ஒரு அரசியல்வாதி ஆவார். அமைச்சர் பதவி மூத்த அமைச்சர், இணை அமைச்சர், துணை அமைச்சர் எனப் பல மட்டங்களில் உண்டு. மூத்த அமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் அரசின் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பர். அரசாட்சி முறைமையைப் பொறுத்து அமைச்சரவையின் தலைவராக, அரசர், ஆளுநர் நாயகம், பிரதம அமைச்சர், அல்லது சனாதிபதி இருப்பார்.

தெரிவு

நாடாளுமன்ற அரசாட்சி முறைமை உள்ள நாடுகளில், குறிப்பாக வெசுட்மின்சிட்டர் முறையைப் பின்பற்றும் நாடுகளில் அமைச்சர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டவாக்க அவையில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் கீழவையையும், மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படாத மேலவையையும் கொண்டுள்ள சில நாடுகளில், கீழவையில் இருந்து மட்டுமன்றி மேலவையில் இருந்தும் அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவதுண்டு. நாடாளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் அமைச்சர்களைப் பிரதம அமைச்சரே தெரிவு செய்கிறார்.

சனாதிபதி முறையைக் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ போன்ற நாடுகளில் அமைச்சர்கள் செயலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya