அம்மா திருவடி கோயில்

அம்மாதிருவடி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:ஊரகம், திருச்சூர்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளம்

அம்மாதிருவடி கோயில் (Ammathiruvadi Temple) அல்லது வலயதீஸ்வரி கோயில் என்பது தென் இந்தியாவில் கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில் ஊரகம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இந்த அற்புதமான பண்டைய அம்மன் கோயிலானது திருச்சூர் நகரத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், திருச்சூர் நோக்கி பயணிக்கும் போது இரிஞ்ஞாலகுடா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட அதே தோலைவிலும் அமைந்துள்ளது.

இந்தக்கோவில் மிகவும் பிரபலமான இறைவி துர்க்கையை வழிபடும் 108 கோயில்களில் முதன்மையானது, இது "அம்மாதிருவாடி கோயில்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

ஊரகம் அம்மதிருவாடி கோயிலானது அதன் கம்பீரமான இராஜகோபுரம், மதில்கெட்டு (மதில் சுவர்கள்), ஊதுபுரா (உணவு மண்டபம்), நாலம்பலம் (கருவறையை ஓட்டி சுற்றியுள்ள கட்டடம்), இரட்டை அடுக்கு மாடி ஸ்ரீகோவில் (கருவறை ) ஆகியவற்றைக் கொண்ட ஒரு கட்டடக்கலை அற்புதமாகும்.

கேரளத்தின் 108 துர்காலயங்களில் (துர்கை கோயில்களில்) முதன்மையானது வலயதீஸ்வரி கோயில் அல்லது ஊரகம் அம்மதிருவாடி கோயில் என்று அழைக்கப்படுகிறது. புராணங்களின் கூற்றுப்படி, கேரளத்தை மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் கடலில் இருந்து மீட்டு தனது பரசு (கோடரியை) கன்னியாகுமரியிலிருந்து கோகர்ணத்துக்கு எறிந்து இந்த நிலத்தை 64 கிராமங்களாகப் பிரித்தார். இந்த பார்கவா நிலத்தின் செழிப்புக்கும், நல்வாழ்வுக்கும், துர்கையின் தீங்கற்ற ஆசீர்வாதம் பெறுவது அவசியம் என்பதை உணர்ந்த அவர், துர்கை கோயிலுக்கு 108 இடங்களை அடையாளம் கண்டார். இந்த கோயில்களின் இருப்பிடங்கள் பரமசிவனின் மனைவியான சதி தேவியின் உடல் பாகங்கள் சிதறிய இடங்களைக் குறிக்கின்றன, தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி தட்சனின் யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார்.

ஐதீகம்

கேரள நாட்டு ஐதீகத்தின் படி, சுமார் 700 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன், பூமுள்ளி நம்பூதிரி என்பவர் (திருவலயன்னூர் பட்டதிரி எனவும் அறியப்படுபவர்) அம்மா திருவடி கோவிலை நிறுவினார். இன்று கோவில் அமைந்திருக்கும் இடம் ஒரு காலத்தில் அவருடைய வீடாக இருந்தது. அந்தக்காலத்தில் ஊரகம் என்ற இந்த கிராமம் பெருவனம் கிராமத்தின் ஒரு அங்கமாக இருந்தது (பண்டைய கேரளாவின் புராதனமான 64 கிராமங்களில் ஒன்று). நம்பூதிரி அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மனை கோவிலில் வழிபட சென்ற பொழுது, அம்மன் நம்பூதிரியின் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்தார், அதனால் காஞ்சி காமாட்சி அம்மன் அவருடன் அவருடைய பனை இலையால் உருவாக்கப்பட்ட அவரது குடையில் அமர்ந்து, கேரளாவிற்கு வந்தார். அவர் வீட்டிற்கு வந்ததும் அவர் அவரது குடையை வீட்டில் நிலத்தில் வைத்தார். அவர் மீண்டும் திரும்பி வந்து குடையை எடுத்த பொழுது, அவரால் அந்தக் குடையை திரும்பப் பெற இயலவில்லை. அது மிகவும் கனமாகவும், நிலத்துடன் ஒன்றியது போலவும் காணப்பட்டது. மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு பிரச்னம் வைத்து சோதித்துப் பார்த்த பொழுது, அந்தக் குடையில் காஞ்சி காமாட்சி அம்மனே குடியிருப்பதாகக் கண்டது. அன்று இரவே இறைவி நம்பூதிரியின் கனவில் பிரத்தியட்சமானார் மேலும் அவர் அம்மனுக்காக அங்கே ஒரு கோவிலை பணிந்திட வேண்டும் என்றும், அவர் பிறகு ஊர்கத்தை விட்டு செல்ல வேண்டும் என்று காணப்பட்டது. மேலும் இறைவி அவருக்கு தெரிவித்தது என்ன என்றால் வீட்டிலிருந்து வெகு தொலைவில் ஒரு கிணற்றின் அடியில் இருந்து அம்மனின் விக்கிரகம் கிடைக்கப்பெறும் மேலும் அந்த விக்கிரகத்தில், வீட்டில் குடையில் நிலைகொண்டு இருக்கும் இறைவியை அதில் பிரதிட்டை செய்து கோவிலை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நம்பூதிரியும் அம்மன் கூறியதை அப்பொழுதே செய்துமுடித்தார். அவர் அம்மன் அருளியதைப் போலவே அந்தக் கோவிலை அமைத்தார், அவரது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே தானம் செய்தார் மேலும் கோவிலின் நிருவாகத்தை கொச்சி மகாராஜாவை ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டார். அப்பொழுது முதல், இந்த இறைவி அம்மா திருவடி என அழைக்கப் பெற்றார்.அம்மா திருவடி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பூரம் திருவிழாவில் சாத்தக்குடம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவுடன் பங்கேற்பார்.

உற்சவங்கள்

மகீரம் புறப்பாடு என்ற உற்சவம் கோவிலின் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். அந்த நன்னாளில் அம்மா திருவடியான இறைவி, ஆராட்டுபுழா பூரம் திருவிழாவில் கலந்துகொள்ள யாத்திரை புறப்படும் நாளாகும். பூரம் திருவிழாவில் அம்மா திருவடியான இறைவி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறாள். பூரம் திருவிழா முற்றிலும் முடிந்த பிறகே அம்மா திருவடி இறைவி மீண்டும் தமது கோவிலுக்கு திரும்பி வருகிறாள்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya