அயர்ன் மெய்டன்
அயர்ன் மெய்டன் (Iron Maiden) என்பது ஒரு இங்கிலாந்து இசைக் குழு ஆகும். இது 1975 ஆம் ஆண்டில் கிழக்கு லண்டனின் லெய்டனில் உருவாகியது. இந்த இசைக்குழுவின் கலைஞரும், பாடலாசிரியருமான ஸ்டீவ் ஹாரிஸ் தான் இந்த குழுவை நிறுவி இயக்கி வருகிறார். இந்த குழு உருவானதில் இருந்து மொத்தமாய் முப்பது இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட் , 1983 ஆம் ஆண்டின் பீஸ் ஆஃப் மைண்ட் , 1984 ஆம் ஆண்டில் பவர்ஸ்லேவ் , 1985 ஆம் ஆண்டில் பெரும் பாராட்டுப் பெற்ற நேரலை இசைத்தொகுப்பான லிவ் ஆஃப்டர் டெத் , 1986 ஆம் ஆண்டில் சம்வேர் இன் டைம் , மற்றும் 1988 ஆம் ஆண்டில் செவன்த் சன் ஆஃப் எ செவன்த் சன் ஆகிய அமெரிக்க பிளாட்டின விற்பனை இசைத்தொகுப்புகள் இக்குழுவின் வெளியீடுகளே ஆகும். அவர்களின் மிக சமீபத்திய இசைப்பதிவக முயற்சியான, எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத் , 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பில்போர்டு 200 வரிசையில் ஒன்பதாவது இடத்தையும் இங்கிலாந்தில் 4 வது இடத்தையும் எட்டிப் பிடித்தது. இங்கிலாந்தில் இந்த இசைத்தொகுப்பு தங்கச் சான்று பெற்றது. இந்தியாவில் பிளாட்டினச் சான்று பெற்ற வெகு அபூர்வமான இசைத்தொகுப்புகளில் இதுவும் ஒன்று. இன்றுவரையான காலத்தின் மிக வெற்றிகரமான ஹெவி மெட்டல் இசைக்குழுக்களில் ஒன்றாகத் திகழும் அயர்ன் மெய்டன் உலகெங்கும்[1][2][3][4] 100 மில்லியன் இசைத்தட்டுகளுக்கும் அதிகமாய் விற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த இசைக்குழு 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சாதனைக்கான இவோர் நாவெல்லோ விருதினை வென்றது.[5] அக்டோபர் 2009 நிலவரப்படி, இந்த இசைக்குழு தங்களது வாழ்நாளில் 2000 க்கும் அதிகமான நேரலை நிகழ்ச்சிகளை செய்திருக்கிறது.[சான்று தேவை] வரலாறுபால் டி’அனோ உடனான ஆரம்ப வருடங்கள் (1975-1978)அடித்தொனி இசைக்கருவி இசைப்பவரான ஸ்டீவ் ஹாரிஸ், தனது முந்தைய குழுவான ஸ்மைலரை விட்டு விலகிய கொஞ்ச நாட்களில், 1975 ஆம் ஆண்டின் கிருத்துமஸ் தினத்தன்று அயர்ன் மெய்டன் குழுவை உருவாக்கினார். அலெக்சாண்டர் டுமாஸ் எழுதிய ஒரு புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் என்னும் திரைப்படத்தில் இருந்து தான் இந்த இசைக்குழுவின் பெயர் உதித்ததாக ஹாரிஸ் கூறினார். அந்த சமயத்தில் அந்த படத்தை அவர் பார்த்திருந்தார். அயர்ன் மெய்டன் சித்திரவதை சாதனத்தின் பெயரில் குழுவுக்கு அந்த பெயரை சூட்டினார்.[6] ஸ்டீவ் ஹாரிஸும் கிதார் கலைஞரான டேவ் முர்ரேயும் தான் அயர்ன் மெய்டன் குழுவின் வெகுநாள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆரம்ப பாடல் கலைஞரான பால் டே “மேடைக்கு தேவையான சக்தி அல்லது இதம் இல்லை” என்று கூறி வெளியேற்றப்பட்டார்.[7] அவருக்குப் பதிலாய் டென்னிஸ் வில்காக் வந்தார். கிஸ் குழுவின் ரசிகரான இவர் நெருப்பு ஒத்திகை, மற்றும் போலியான ரத்தம் ஆகியவற்றை நேரலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக் கொண்டார். வில்காக்கின் நண்பரான டேவ் முர்ரேயும் இதில் சேர்ந்து கொள்ள அழைக்கப்பட்டார். இது கிதார் கலைஞர்கள் டேவ் சலிவானுக்கும் டெர்ரி ரான்ஸுக்கும் ஏமாற்றம் அளித்தது.[8] இதில் வெறுப்புற்று ஹாரிஸ் 1976 ஆம் ஆண்டில் இந்த குழுவையே தற்காலிகமாகப் பிரித்து விட்டார்.[8] ஆயினும் விரைவில் முர்ரே மட்டுமே ஒரே கிதார் கலைஞராகத் தொடர குழு மீண்டும் உருவாக்கம் பெற்றது. அயர்ன் மெய்டன் 1977 ஆம் ஆண்டில் பாப் சாயர் என்னும் இன்னொரு கிதார் கலைஞரை சேர்த்துக் கொண்டது. அவரின் பொருட்டு முர்ரே மற்றும் வில்காக்கிற்கு இடையே விரிசல் உருவானது. இதனையடுத்து ஹாரிஸ் முர்ரே மற்றும் சாயர் இருவரையும் வெளியேற்றும் நிலைக்கு சென்றது.[9] 1977 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பிரிட்ஜ்ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்ச்சி மோசமாய் அமைந்ததை அடுத்து, ஹாரிஸ் மொத்த குழுவையும் நீக்கி விட்டார்.[10] டேவ் முர்ரே மீண்டும் சேர்க்கப்பட்டார். டோக் சாம்ப்சன் மேளக் கலைஞராக அமர்த்தப்பட்டார். புகழ்பெறுதல் (1978–1981)தற்சமயமாய் நிகழ்ந்த சந்திப்பு ஒன்று பாடகர் பால் டி’அனோவுக்கு வெற்றிகரமான தேர்வு ஒத்திகையாக மாறியது. பாலின் குரலில் இனம் காண முடியாத ஒரு வகை சிறப்பு பண்பு இருக்கும் என்று ஸ்டீவ் ஹாரிஸ் கூறியிருக்கிறார்.[11] மூன்று வருடங்களாக இசைத்துக் கொண்டிருந்த அயர்ன் மெய்டன் குழு, அதுவரை தங்களது இசையை இசைப்பதிவே செய்யாதிருந்தது. 1978 ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இந்த இசைக்குழு தி சவுண்ட்ஹவுஸ் டேப்ஸ் என்னும் ஒரு காட்சி[12] இசைப்பதிவை மேற்கொண்டது. நான்கு பாடல்கள் மட்டும் கொண்ட அதனை அந்த இசைக்குழு சில வாரங்களுக்குள்ளாகவே ஐயாயிரம் பிரதிகளையும் விற்றுத் தீர்த்தது.[13][13] இசைத்தொகுப்பில் இவர்களது முதல் தோற்றம் மெட்டல் ஃபார் முத்தாஸ் தொகுப்பில் (இது 15 பிப்ரவரி 1980 அன்று வெளியானது) நிகழ்ந்தது. “சாங்சுவரி” மற்றும் “ராத்சைல்டு” ஆகிய இரண்டு ஆரம்ப பதிப்புகள் முன்னதாக வெளிவந்திருந்தன. 1977 ஆம் ஆண்டின் பிற்பகுதி துவங்கி 1978 ஆம் ஆண்டு வரை, முர்ரே மட்டுமே இசைக்குழுவின் ஒரே கிதார் கலைஞராய் இருந்தார். அதன்பின் பால் கெய்ன்ஸ் 1979 ஆம் ஆண்டில் இணைந்தார். இசைப்பதிவகத்திற்கு செல்வதற்கு சற்று முன்னால், கெய்ன்ஸ் இசைக் குழுவை விட்டு விலகி விட்டார். பல்வேறு கிதார் கலைஞர்களும் தற்காலிகமாக அமர்த்தப்பட்டு இறுதியில் டென்னிஸ் சுட்ராட்டன் தேர்வானார். ஆரம்பத்தில், இந்த இசைக்குழு டேவ் முர்ரேயின் சிறுவயது நண்பரான அட்ரியன் சுமித்தை அமர்த்த விரும்பியது. ஆனால் சுமித் தனது சொந்த இசைக்குழுவான அர்ச்சினுக்காக உழைத்துக் கொண்டிருந்தார்.[14] மேளக் கலைஞர் டோக் சாம்ப்சனும் மாற்றப்பட்டு கிளைவ் பர் வந்தார் (இவரை சுட்ராட்டன் தான் இசைக்குழுவுக்குள் கொண்டு வந்தார்). 1979 டிசம்பரில், இந்த இசைக்குழு இஎம்ஐ நிறுவனத்துடன் ஒரு பெரும் பதிவு ஒப்பந்தத்தில் இறங்கியது.[15] 1980 ஆம் ஆண்டில் இசைக்குழுவின் அதேபெயரிலேயே வெளிவந்த அயர்ன் மெய்டன் இசைத்தொகுப்பு வெளியான முதல் வாரத்திலேயே இங்கிலாந்தின் இசைத்தொகுப்புகள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தது.[16] அத்துடன் இந்த குழு பிரித்தானிய ஹெவி மெட்டல் இசையின் புதிய அலை இயக்கத்தின் முன்னணி குழுக்களில் ஒன்றாய் ஆனது.[17] தலைப்பு இசைத்தடத்துடன் சேர்த்து, இசைத்தொகுப்பில் “ரன்னிங் ஃப்ரீ”, “ட்ரான்ஸில்வேனியா”, “ஃபேண்டம் ஆஃப் தி ஓபரா”, மற்றும் ”சாங்சுவரி” போன்றவை உள்ளிட்ட முந்தைய வெற்றிப் படைப்புகளும் இருந்தன. பிறகு கருத்து வேறுபாடுகளின் காரணமாக டென்னிஸ் சுட்ராடன் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.[18] 1980 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுட்ராடனுக்குப் பதிலாக அட்ரியன் சுமித் சேர்க்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டில், மெய்டன் கில்லர்ஸ் என்ற பெயருடனான தங்களது இரண்டாவது இசைத்தொகுப்பை வெளியிட்டனர். இந்த புதிய இசைத்தொகுப்பு அறிமுக இசைத்தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்த, ஆனால் அச்சமயத்தில் உபரியாகக் கருதப்பட்ட, பல தடங்களைக் கொண்டிருந்தது. “புரொடிகல் சன்” மற்றும் “மர்டர்ஸ் இன் தி ரூ மோர்க்” ஆகிய இரண்டு புதிய இசைத் தடங்கள் மட்டுமே இசைத்தொகுப்புக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டன.[19] இந்த இசைத்தொகுப்பின் தலைப்பு எட்கர் ஆலன் போ எழுதிய ஒரு சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டதாகும். வெற்றி (1981–1986)![]() 1981 ஆம் ஆண்டுவாக்கில், பால் டி’அனோவிடம் தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளும் பழக்கம் அதிகமாய் வெளிப்படத் துவங்கியது. குறிப்பாக அவர் போதை மருந்து பயன்படுத்துவதாய் கூறப்பட்டது. ஆயினும் டி’அனோவே இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.[20] இந்த குழு அமெரிக்காவில் பெரிய வெற்றிகளை சாதிக்கத் துவங்கிய சமயத்தில், அவரது மேடைசெயல்பாடுகள் பாதிக்கத் துவங்கின. 1981 ஆம் ஆண்டின் இறுதியில், இசைக்குழு டி’அனோவை நீக்கி விட்டு ஒரு புதிய பாடகரைத் தேடத் துவங்கியது. முன்னர் சாம்சனில் இருந்த புரூஸ் டிக்கின்சன் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மெய்டனுக்கான தேர்வு ஒத்திகை பெற்று வெகு விரைவில் அந்த இசைக் குழுவில் இணைந்தார். அயர்ன் மெய்டன் உடன் டிக்கின்சனது பதிவுபெற்ற அறிமுகம் என்பது 1982 ஆம் ஆண்டின் தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட் உடன் நிகழ்ந்தது. இந்த இசைத்தொகுப்பு இங்கிலாந்து இசைத்தொகுப்பு வரிசையில் முதலிட இசைத்தட்டு சாதனையை[21] இந்த இசைக்குழுவுக்கு முதல்முறையாகப் பெற்றுத் தந்தது. அத்துடன் பல பிற நாடுகளின் வரிசைகளிலும் முன்னணி பத்தில் இடம் பெற்றது.[22] இரண்டாவது முறையாக இந்த குழு உலகப் பயணம் சென்றது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றது. குழுவின் அமெரிக்க பயணம் சர்ச்சையை சந்தித்தது. புதிய இசைத்தொகுப்பின் தலைப்பு இசைத்தடத்தைக் காட்டி அயர்ன் மெய்டன் சாத்தானியவாத வகையைச் சேர்ந்தது என்று அமெரிக்க பழைமைவாத அரசியல் பரப்புரை குழு ஒன்று கூறியது.[22] இந்த விமர்சனத்தை நிறுத்த இசைக்குழு உறுப்பினர்கள் செய்த முயற்சிகள் தோற்றுப் போயின. இசைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிறிஸ்தவ ஆர்வலர்களின் ஒரு குழுவினர் அயர்ன் மெய்டன் இசைத்தட்டுகளை நொறுக்கினர். அந்த சமயத்தில் டிக்கின்சனுக்கு சாம்சன் நிர்வாகத்துடன் அப்போதும் சட்ட சிக்கல்கள் இருந்து கொண்டிருந்தன. எந்த பாடல் உரிமைகளுக்கும் அவரது பெயரைச் சேர்க்க அனுமதிக்கப்படாதிருந்தது. ஆயினும், பல பாடல்களுக்கும் “படைப்புத்திறனுடனான பாதிப்பை” வழங்குவதற்கு அவரால் இயன்றது. கிதார் லெஜண்ட்ஸ் நேர்காணலில் அவர் கூறும்போது “சில்ரன் ஆஃப் தி டேம்ண்டு”, “தி பிரிசனர்” மற்றும் “ரன் டூ தி ஹில்ஸ்” ஆகியவற்றின் ஒட்டுமொத்த கருப்பொருட்களுக்குத் தான் பங்களிப்பு செய்ததாகக் கூறினார். 1982 ஆம் ஆண்டின் டிசம்பரில், தனிநபர் பிரச்சினைகள் மற்றும் சுற்றுப்பயண தேதி பிரச்சினைகள் தொடர்பாக மேளக் கலைஞரான கிளைவ் பர் இசைக்குழுவுடனான தனது தொடர்பை முறித்துக் கொண்டார். நிக்கோ மெக்பிரெய்ன் கொண்டு அவர் மாற்றப்பட்டார். வெகு விரைவில், 1983 ஆம் ஆண்டு சமயத்தில், இந்த குழு பீஸ் ஆஃப் மைண்ட் தொகுப்பை வெளியிட்டது. இது இங்கிலாந்தில் மூன்றாவது இடத்தை எட்டியது. வட அமெரிக்க வரிசைகளில் இசைக்குழுவின் படைப்பு அறிமுகமாக அமைந்த அது பில்போர்டு 200 வரிசையில் 70வது இடத்தில் இருந்தது.[23] பீஸ் ஆஃப் மைண்டில் “ஃபிளைட் ஆஃப் இகாரஸ்” மற்றும் “தி டுரூப்பர்” ஆகிய வெற்றிகரமான தனிப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பீஸ் ஆஃப் மைண்ட் வெற்றிபெற்ற கொஞ்ச காலத்தில், இந்த குழு 1984 ஆம் ஆண்டு செப்டம்பரில் பவர்ஸ்லேவ் இசைத்தொகுப்பை வெளியிட்டது. ரசிகர்களுக்குப் பிடித்த “2 மினிட்ஸ் டூ மிட்நைட்”, “ஏசஸ் ஹை”, மற்றும் “ரைம் ஆஃப் தி ஆன்சியன்ட் மரைனர்”,[24] ஆகியவை இந்த இசைத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. பிந்தைய பாடல் சாமுவேல் டெய்லர் கோலிரிட்ஜ் கவிதையை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் வந்ததாகும். 13 நிமிட நீளம் கொண்டது. இந்த இசைத்தொகுப்பைத் தொடர்ந்து இக்குழு மேற்கொண்ட வேர்ல்டு ஸ்லேவரி டூர் என்கிற பயணம் தான் இன்று வரை அந்தக் குழுவின் மிகப்பெரியதாக இருந்து வருகிறது. சுமார் 13 மாத காலங்கள் 193 நிகழ்ச்சிகள் வரை இதில் இசைக்கப்பட்டன. இசை வரலாற்றின் மிகப் பெரும் பயணங்களில் இது ஒன்றாகும் - 13 மாத காலத்தில் 3,500,000 பேருக்கு இசை நிகழ்ச்சி செய்யப்பட்டிருந்தது.[25] பல நிகழ்ச்சிகள் ஒரே நகரத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாய் நிகழ்த்தப்பட்டன. கலிபோர்னியாவின் லாங் பீச்சில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த 4 அடுத்தடுத்த காட்சிகளில் இசை நிகழ்ச்சி நடந்தது. மொத்தமாய் 54,000 ரசிகர்கள் பங்குபெற்றனர். இங்கே இவர்களது அநேக இசைப்பதிவுகள் அடுத்து வந்த அவர்களது நேரலை வெளியீடான லிவ் ஆஃப்டர் டெத் இசைத்தொகுப்புக்காக செய்யப்பட்டதாகும். ராக் இன் ரியோ விழாவிலும் அயர்ன் மெய்டன் தலைமை நிகழ்ச்சி (குவீன் உடன்) செய்தது. அங்கே விழாவுக்கு வருகையுற்ற சுமார் 300,000 ரசிகர்களிடையே அவர்கள் இசை நிகழ்த்தினர்.[4] உடல்ரீதியாகவும் மிகவும் வருத்துவதாக அமைந்த இந்த பயணத்தின் முடிவில் அவர்கள் 6 மாத ஓய்வு விடுப்பு எடுத்துக் கொண்டனர். இக்குழுவின் வரலாற்றில் இது தான் முதலாவது ஓய்வு விடுப்பு ஆகும். புதிய நேரலை இசைத்தொகுப்புக்காக உத்தேசிக்கப்பட்ட உதவிப் பயணம் இச்சமயத்தில் ரத்து செய்யப்பட்டது.[26] பரிசோதனை முயற்சி (1986–1989)தங்களது ஓய்வு விடுப்பில் இருந்து திரும்பியதும், இந்த குழு, சம்வேர் இன் டைம் என்னும் தங்களது 1986 ஆம் ஆண்டு இசைப்பதிவக இசைத்தொகுப்பிற்கு ஒரு மாறுபட்ட பாணியைப் பின்பற்றினர். வரலாறு, கால நகர்வு மற்றும் நெடிய பயணங்கள் என காலச் சக்கர பயணம் மற்றும் அது தொடர்பான விடயங்களை ஓரளவு கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் அமைக்கப்பட்டிருந்தன.[27] சம்வேர் இன் டைமில் செய்த பரிசோதனை 1988 சமயத்தின் செவன்த் சன் ஆஃப் எ செவன்த் சன் வருவதற்கு பாதை வகுத்தது. மெய்டன் குழுவின் பரிசோதனை முயற்சியில் இன்னும் கொஞ்சம் வலு சேர்க்கப்பட்டதாக, இந்த இசைத்தொகுப்பில் கண்ணுக்குப் புலப்படாததையும் காணும் திறன் கொண்ட ஒரு புதிரான குழந்தை குறித்த கதை இடம்பெற்றிருந்தது.[28] இங்கிலாந்தின் இசைத்தொகுப்பு வரிசையில் முதலிடத்தைப் பெறும் இசைக்குழுவின் இரண்டாவது இசைத்தொகுப்பாக இது ஆனது.[29] 1990 ஆம் ஆண்டில், தனிப்பாடல்களை வெளியிடுவதில் அயர்ன் மெய்டனின் முதல் பத்து ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து, தி ஃபர்ஸ்ட் டென் இயர்ஸ் என்னும் தொகுப்பு வெளியிடப்பட்டது. எழுச்சி (1989–1994)1989 ஆம் ஆண்டில், அயர்ன் மெய்டன் உடனான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, கிதார் கலைஞரான அட்ரியன் சுமித் தனது குழுவுடன் இணைந்து சில்வர் அன் கோல்ட் என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். 1989 ஆம் ஆண்டின் இந்த இடைவெளியில், பாடகர் புரூஸ் டிக்கின்சன் 1990 ஆம் ஆண்டில் டாட்டூட் மில்லியனர் எனும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். அதன்பின் வெகு விரைவிலேயே, ஒரு புதிய இசைத்தொகுப்பை உருவாக்க அயர்ன் மெய்டன் குழு மீண்டும் இணைந்தது. ஆர்வமில்லையென அட்ரியன் சுமித் குழுவை விட்டு விலகி விட்டார். புரூஸ் டிக்கின்சனின் இசைத்தொகுப்பில் பணியாற்றியிருந்த ஜேனிக் கெர்ஸ் சுமித்துக்கு பதிலாய் சேர்க்கப்பட்டார். ஏழு வருட காலத்தில் முதல் புதிய குழு உறுப்பினர் அவர் தான். நோ பிரேயர் ஃபார் தி டையிங் என்னும் இசைத்தொகுப்பு 1990 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் வெளியானது.[30] பிரிங் யுவர் டாட்டர்....டு தி ஸ்லாட்டர்” என்னும் தனிப்பாடல் இங்கிலாந்தின் தனிப்பாடல் வரிசையில் முதலிடத்தைப் பெற்றது. முதலிடத்திற்கு மிகத் துரிதமாக வரிசையிடப்பட்டு பின் அடுத்த சில வாரங்களில் மீண்டும் எந்த தரவரிசையும் பெறாமல் போன ஒரு சாதனையும் இந்த தனிப்பாடலுக்கு உண்டு.[31] 1992 ஆம் ஆண்டில் வெளியான ஃபியர் ஆஃப் தி டார்க் இசைத்தொகுப்பு நீளமான பாடல்களைக் கொண்டிருந்தது. இதனால் குறுந்தகடில் பதிவு செய்யப்பட்ட அயர்ன் மெய்டனின் முதல் இசைத்தொகுப்பாகவும் இது ஆனது. தலைப்பு பாடல் மற்றும் “ஆஃப்ரெய்ட் டூ ஷூட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்” போன்ற பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தன. குழுவின் மெல்லிய பாடல்களில் ஒன்றான ”வேஸ்டிங் லவ்” மற்றும் இரண்டாமிடம் பிடித்த தனிப்பாடலான “பீ குவிக் ஆர் பீ பேட்” ஆகியவையும் இந்த இசைவட்டில் இடம்பெற்றிருந்தன. கெர்ஸ் எழுதிய பாடல்கள் முதல்முதலாய் இந்த இசைத்தொகுப்பில் இடம்பெற்றன. ஹாரிஸ் மற்றும் டிக்கின்சனுக்கு இடையில் பாடல் விஷயத்தில் எந்த வித உதவியும் இருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஒரு விரிவான உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இலத்தீன் அமெரிக்க பயணமும், ஏழு ஐரோப்பிய நாடுகளில் “மான்ஸ்டர்ஸ் ஆஃப் ராக் ஃபெஸ்டிவல்” பிரதான நிகழ்ச்சியும் இடம் பெற்றன. டோனிங்டன் பார்க்கில் அயர்ன் மெய்டனின் இரண்டாவது நிகழ்ச்சியில் சுமார் 80,000 விழா ரசிகர்கள் குவிந்தனர். இதிலிருந்து நேரலை அட் டோனிங்டன் இசைத்தொகுப்பு உருப்பெற்று காணொளி வெளியானது.[32] 1993 ஆம் ஆண்டில், புரூஸ் டிக்கின்சன் தனது தனிக் கலைஞர் வாழ்க்கையை மேலும் தொடரும் பொருட்டு குழுவை விட்டு விலகினார். ஆயினும், ஒரு விடைகொடுக்கும் சுற்றுப்பயணத்திலும் இரண்டு நேரலை இசைத்தொகுப்புகளிலும் குழுவுடன் பங்கேற்க டிக்கின்சன் ஒப்புக் கொண்டார். எ ரியல் லைவ் ஒன் என்கிற முதலாவதில் 1986 முதல் 1992 ஆம் ஆண்டு வரையான பாடல்கள் இடம்பெற்றன. இது 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. எ ரியல் டெட் ஒன் என்கிற இரண்டாவது 1975 முதல் 1984 ஆம் ஆண்டு வரையான பாடல்களைக் கொண்டிருந்தது. இது டிக்கின்சன் குழுவை விட்டு விலகிய பின் வெளியிடப்பட்டது. அயர்ன் மெய்டன் உடனான தன்னுடைய விடைகொடுக்கும் நிகழ்ச்சியை 28 ஆகஸ்டு 1993 அன்று அவர் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டு பிபிசியால் ஒளிபரப்பப்பட்டது. அத்துடன் ரெய்ஸிங் ஹெல் என்கிற பெயரின் கீழ் காணொளியிலும் வெளியிடப்பட்டது. பிளேஸ் சகாப்தம் (1994–1999)1994 ஆம் ஆண்டில், முன்னர் வுல்ஃப்ஸ்பேன் இசைக்குழுவில் இருந்த பிளேஸ் பேலீயைத் தேர்வு செய்யும் முன்னதாக நூற்றுக்கணக்கான பாடகர்களின் குரல் தேர்வு ஒத்திகை செய்யப்பட்டது. பேலீ தனக்கு முன்னாலிருந்தவரில் இருந்து மாறுபட்ட குரல் பாணியைக் கொண்டிருந்தார். இது இறுதியாக ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது.[33] இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு (இசைப் பதிவில் இருந்து மூன்று ஆண்டு இடைவெளி - இது அந்த இசைக்குழுவுக்கு சாதனையளவான இடைவெளி ஆகும்) அயர்ன் மெய்டன் 1995 ஆம் ஆண்டில் திரும்பி வந்தது. தி எக்ஸ் ஃபேக்டர் வெளியாகி இங்கிலாந்தில் மிகக் குறைந்த வரிசை இடத்தைப் பிடித்தது (எட்டாவது இடத்தில் அறிமுகம் கண்டது). இந்த இசைத்தொகுப்பில் 11 நிமிட காவியமான “சைன் ஆஃப் தி கிராஸ்” இடம் பெற்றிருந்தது. “ரைம் ஆஃப் தி ஆன்சியன்ட் மரைனருக்கு”ப் பின் இந்த குழுவின் நீளமான பாடல் இதுவாகும். ஃபாலிங் டவுன் என்கிற திரைப்படத்தின் அடிப்படையில் அமைந்த “மேன் ஆஃப் தி எட்ஜ்” மற்றும் புதினம் ஒன்றின் அடிப்படையில் அதே பெயரில் அமைந்த “லார்ட் ஆஃப் தி ஃபைல்ஸ்” ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன. 1995 மற்றும் 1996 ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்தில் இந்த குழு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டது. தி பெஸ்ட் ஆஃப் தி பீஸ்ட் வெளியீட்டுக்காக இடைவெளி விடும் முன்னதாக, இஸ்ரேலில் முதன் முறையாக இசை நிகழ்த்தியது. 1998 ஆம் ஆண்டில் வெளியான வர்சுவல் XI இசைத்தொகுப்புக்காக குழு மீண்டும் இசைப்பதிவகத்துக்குத் திரும்பியது. இந்த இசைத்தொகுப்பின் வரிசை இடங்கள் தான் இன்று வரை இந்த குழுவின் மிகக் குறைந்த தரவரிசை இடமாக இருக்கிறது.[34] அயர்ன் மெய்டன் வரலாற்றில் முதல்முறையாக இதன் உலகலாவிய விற்பனை ஒரு மில்லியனை எட்டவும் தவறியது. அதே சமயத்தில் லைவ் அட் டோனிங்டன் வரையிலான அயர்ன் மெய்டனின் ஒட்டுமொத்த இசைசரிதத்தை புதுப்பிப்பதில் உதவி ஸ்டீவ் ஹாரிஸ் ஒரு தொகுப்பினை வெளியிட்டார். மறுஇணைவு (1999–2005)![]() 1999 பிப்ரவரியில், பேலீ பரஸ்பர சம்மதத்தின் பேரில் குழுவை விட்டு விலகினார். அதே சமயத்தில், புரூஸ் டிக்கின்சன் மற்றும் கிதார் கலைஞர் அட்ரியன் சுமித் ஆகிய இருவரும் குழுவில் திரும்ப இணைகிறார்கள் என்றும் அத்துடன் ஜேனிக் கெர்ஸ் தொடர்ந்து இருப்பார் எனவும் அறிவித்து இசைக்குழுவினர் தமது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இப்போது அயர்ன் மெய்டனில் மூன்று கிதார் கலைஞர்கள் இருந்தனர். தி எட் ஹன்டர் டூர் என்னும் மாபெரும் வெற்றிபெற்ற மறுஇணைவு சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டனர். புரூஸ் டிக்கின்சன் மற்றும் அட்ரியன் சுமித் உடன் மறுஇணைவுக்குப் பிறகு அயர்ன் மெய்டனின் முதல் இசைப்பதிவக வெளியீடு 2000 ஆம் ஆண்டின் பிரேவ் நியூ வேர்ல்டு என்னும் இசைத்தொகுப்பாய் வந்தது. அதனையடுத்து மேற்கொண்ட உலக சுற்றுப்பயணம் 100 தேதிகளுக்கும் மேலாய் நடந்தது. 19 ஜனவரி 2001 அன்று பிரேசிலில் நடந்த ரான் அன் ரியோ விழா நிகழ்ச்சியுடன் இது முடிந்தது. இதில் சுமார் 250,000 ரசிகர்களுக்கு முன்னர் அயர்ன் மெய்டன் இசைநிகழ்ச்சி நடந்தது.[35] இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு, 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராக் இன் ரியோ என்கிற பெயரில் குறுந்தகடு மற்றும் இறுவட்டாக வெளியானது. 2003 ஆம் ஆண்டு கோடையில் தங்களது கிவ் மீ எட்... ’டில் ஐ’ம் டெட் சுற்றுப்பயணத்தை (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் மூன்று மாதங்கள் சுற்றுப் பயணம் செய்து ஆங்காங்கே 56 நிகழ்ச்சிகளில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களுக்கு இசை நிகழ்த்தினர். தொடர்ந்து அயர்ன் மெய்டன் டான்ஸ் ஆஃப் டெத் வெளியிட்டனர். அவர்களது 13வது இசைத்தொகுப்பு வெளியீடு விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் உலகெங்கும் வெற்றியை சம்பாதித்தது. பீஸ் ஆஃப் மைண்ட் மற்றும் தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட் ஆகிய அவர்களது ஆரம்ப முயற்சிகளுக்கு பொருந்தும் வகையில் இந்த வெளியீடு இருந்தது. வழக்கம் போல வரலாற்று மற்றும் இலக்கிய பாதிப்புகள் தொடர்ந்தன. குறிப்பாக “மான்ட்சேகர்” 1244 ஆம் ஆண்டில் வெற்றிகொள்ளப்பட்ட கதார் (Cathar) கோட்டை பற்றியதாகவும், “பஸ்செண்டேல்” முதலாம் உலகப் போர் சமயத்தில் நிகழ்ந்ததோரு முக்கியமான சண்டை குறித்ததாகவும் இருந்தது. டான்ஸ் ஆஃப் டெத் உலக சுற்றுப்பயணம் என்கிற பெயரில் இந்த இசைத்தொகுப்பிற்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்ட சுற்றுப்பயணம் இந்த குழுவுக்கு இன்னுமொரு மைல்கல்லாய் அமைந்தது. 2003-04 ஆம் ஆண்டுகாலத்தில் 4 மாதங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 50 தேதிகளில் 750,000 க்கும் அதிகமான ரசிகர்களுக்கு இவர்கள் இசைவிருந்து அளித்தனர். தென் அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் டிக்கெட் விற்றுத் தீர்ந்த நிகழ்ச்சிகள் இதில் அடங்கும். ஆதரவு சுற்றுப்பயணத்தின் பகுதியாக ஜெர்மனி, டோர்ட்மண்டில் உள்ள வெஸ்ட்ஃபாலென்ஹாலேயில் அவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு 2005 ஆம் ஆண்டில் ஆகத்து மாதத்தில் நேரலை இசைத்தொகுப்பாக இறுவட்டு வடிவத்தில் டெத் ஆன் தி ரோட் என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில், தங்களது முதல் இசைத்தொகுப்பான அயர்ன் மெய்டன் வெளியீட்டின் 25 வது ஆண்டு நிறைவையும், தங்களது குழு உருவாக்கத்தின் 30வது வருட நிறைவையும் அனுசரிக்கும் வகையில் ஒரு சுற்றுப்பயணத்தை இக்குழு அறிவித்தது. தி இயர்லி டேஸ் என்கிற தலைப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியான இறுவட்டுக்கு ஆதரவாகவும் இந்த சுற்றுப்பயணம் அமைந்தது. இந்த பயண சமயத்தில் தங்களது முதல் நான்கு இசைத்தொகுப்புகளில் இருந்தான பாடல்களை மட்டுமே அவர்கள் இசைத்துக் காட்டினர். தங்களது ஆரம்ப நாட்களைக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, “நம்பர் ஆஃப் தி பீஸ்ட்” தனிப்பாடல் மறுவெளியீடு செய்யப்பட்டு அது உடனடியாக இங்கிலாந்து தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. உலெவி கச்சேரி ஐரோப்பா முழுவதிலும் சுமார் 60 மில்லியன் பார்வையாளர்களுக்கு தொலைக்காட்சி வழியிலும் ஒளிபரப்பானது. கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் ஆகத்து 20, 2005 அன்று நடந்த அயர்ன் மெய்டனின் கடைசி ஊஸ்ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் ஒலிபரப்பு அமைப்பை அணைத்து ஷரோன் ஊஸ்பர்ன்[சான்று தேவை] அவர்களது நிகழ்ச்சியில் குறுக்கிட, அதன்பின் எம்சி “ஊஸி! ஊஸி!”என்று முழங்கினார். சிலர் குழுவினர் மீது முட்டைகளை வீசினர். கெல்லி ஊஸ்பர்னும் அவரது சகாக்களும் தான் இதனைச் செய்தது[சான்று தேவை] என்பது பின்னர் கண்டறியப்பட்டது. சுமார் 50,000 பேர் கண்டு ரசித்துக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்காலிகமாய் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் மெக்பிரெய்னின் மேளத்தையும், புரூஸ் டிக்கின்சனின் ஒலிவாங்கி தாங்கியையும், மேடை தளத்தையும் சுத்தம் செய்தனர். இன்னும் பல இடையூறுகள் தொடர்ந்து வர, அயர்ன் மெய்டன் தங்களது தொகுப்பை முடித்தனர். ஷரோன் ஊஸ்பர்ன் மேடைக்கு வந்தார். ஊஸி ஆஸ்பர்ன், பிளாக் சபாத் ஆகியோரையும் மற்றும் ஊஸ்ஃபெஸ்ட் டூரின் தயாரிப்பு தரத்தையும் புரூஸ் டிக்கின்சன் அவமதித்து விட்டதாக ஷரோன் ஊஸ்பர்ன் குற்றம் சாட்டினார். அதே சமயத்தில் குழுவின் மற்ற கலைஞர்களையும் ஊழியர்களையும் அவர் பாராட்டினார்.[36] பார்வையாளர்களில் இருந்த அயர்ன் மெய்டன் ரசிகர்கள் அவரை மேடைக்கு கீழே நகையாடியதோடு “மெய்டன்” என்று கோசமிட்டனர். ஷரோனின் நாடகத்தனமான செயலுக்கு[சான்று தேவை] எதிர்ப்பு தெரிவித்து அவர்களில் 10,000 பேர் ஊஸ்ஃபெஸ்ட் விழாவை விட்டு வெளியேறினர். அவர்களில் பலரும் பின்னர் ஊஸ்ஃபெஸ்ட் தயாரிப்பு நிர்வாகத்திடம் புகார் செய்ததோடு, அயர்ன் மெய்டன் நிகழ்ச்சியைக் கெடுத்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினர். ஆகத்து 26 [37] மற்றும் 28 அன்று நிகழ்ந்த ரீடிங் அண்ட் லீட்ஸ் வார இறுதி விழாக்களின் பிரதான நிகழ்வுகள் (மொத்தமாய் சுமார் 130,000 ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தனர்) மற்றும் அயர்லாந்தில் ஆகத்து 31 அன்று சுமார் 40 000 ரசிகர்கள் முன் நடந்த நிகழ்ச்சி ஆகியவற்றுடன் இக்குழு தனது இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தது.[38] இரண்டாவது முறையாக, முன்னாள் மேளக் கலைஞரான கிளைவ் பர்ரின் தொண்டு அமைப்புக்காக ஒரு இலவச நிகழ்ச்சியையும் நடத்தித் தந்தனர். எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத் (2005-2007 ஆரம்பம் வரை)2006 இலையுதிர் காலத்தில், அயர்ன் மெய்டன் எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத் இசைத்தொகுப்பை வெளியிட்டது.[39] இசைத்தொகுப்பின் பாடல்வரிகளிலும் கலைப்படைப்பிலும் போர் மற்றும் மதம் கருப்பொருளாய் அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். இதில் புதிய இசைத்தொகுப்பை முழுமையாக அவர்கள் இசைத்தனர். இதற்கு வரவேற்பு கலவையாக இருந்தது.[40][41] 2006 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் லைவ் ஃபிரம் அபே ரோடு இசைத்தொகுப்பிற்காக அபே ரோடு இசைப்பதிவகத்தில் ஒரு நேரலை அமர்வை அயர்ன் மெய்டன் பதிவு செய்தது.[42] சாங்சுவரி மியூசிக் நிறுவனத்துடனான தங்களது 27 வருட உறவை முறித்துக் கொள்ள இருப்பதாகவும் பேண்டம் மியூசிக் மேனேஜ்மெண்ட் என்னும் ஒரு புதிய நிறுவனத்தை துவங்க இருப்பதாகவும் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அயர்ன் மெய்டனும் மேலாளர் ராட் ஸ்மால்வுட்டும் அறிவித்தனர். எந்த பிற குறிப்பிடத்தக்க மாற்றங்களும் நடைபெறவில்லை. தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட் இசைத்தொகுப்பின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் "எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்” பயணத்தின் இரண்டாம் பாகத்திற்கு “எ மேட்டர் ஆஃப் தி பீஸ்ட்” என பெயரிடப்பட்டது, இது உலகெங்கிலும் நிகழ்ந்த பல்வேறு விழாக்களில் நடத்திய நிகழ்ச்சிகளை அடக்கியிருந்தது.[43] இந்த தொகுப்பின் பகுதியாக எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத் தில் இருந்து ஐந்து பாடல்களையும் தி நம்பர் ஆஃப் தி பீஸ்டில் இருந்து ஐந்து பாடல்களையும் இசைக்க இருப்பதாக குழு அறிவித்திருந்தது. ஆனாலும் உண்மையில் தி நம்பர் ஆஃப் தி பீஸ்டில் இருந்து நான்கு பாடல்கள் மட்டுமே நிகழ்த்தப்பட்டன. மத்திய கிழக்கில் முதன்முறையாக 2007 ஆம் ஆண்டின் வருடாந்திர துபாய் டெஸர்ட் ராக் ஃபெஸ்டிவல் விழாவில் இவர்கள் 20,000 ரசிகர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி செய்தனர். இந்தியாவில் தங்களது முதல் நிகழ்ச்சியை பெங்களூரில் பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நடந்த ஒரு கச்சேரியில் 45,000க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் நடத்தினர். இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பெரிய ஹெவி மெட்டல் இசைக்குழு பயணம் செய்தது இதுவே முதல்முறையாகும். இந்த குழு தொடர்ச்சியான ஐரோப்பிய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. திறந்த வெளி விழா நிகழ்ச்சிகள் மற்றும் பெரும்பாலும் மைதான அளவிலான சிறு நிகழ்ச்சிகள் ஆகியவை இதில் அடங்கும். இங்கிலாந்தில், தங்களது சிறப்பு மிகுந்த இசைப் பயணத்தில், டோனிங்டன் பார்க்கில் நடந்த டவுன்லோடு ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் நான்காவது முறையாக தலைமை நிகழ்ச்சி நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி சாதனை அளவிலான ரசிகர் வருகையைக் கொண்டிருந்தது. சமீப வருடங்களில் இருந்ததை விட அனுமதிச்சீட்டு விலையும் முகாம் இட விலைகளும் உயர்ந்திருந்த போதிலும் சுமார் 80,000 தீவிர விழா ரசிகர்கள் விழாவிற்கு வருகை தந்தனர்.[44] 24 ஜூன் அன்று தி கிளைவ் பர் அறக்கட்டளை நிதிக்காக இலண்டனின் பிரிக்ஸ்டன் அகாதமியில் நிகழ்த்திய நிகழ்ச்சியுடன் தங்களது சுற்றுப்பயணத்தை குழுவினர் நிறைவு செய்தனர். சமீப வருடங்கள் (2007 பிற்பகுதி முதல்)![]() செப்டம்பர் 5, 2007 அன்று, தங்களது சம்வேர் பேக் இன் டைம் உலக சுற்றுப் பயணத்தை[45] இக்குழு அறிவித்தது. இது அவர்களது லிவ் ஆஃப்டர் டெத் இசைத்தொகுப்பின் இறுவட்டு வெளியீட்டுடன் கைகோர்த்து வந்தது. இந்த பயணம் இந்தியாவின் மும்பை நகரில் பிப்ரவரி 1, 2008 அன்று துவங்கியது. இங்கு இந்த குழு சுமார் 30,000 ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்தது. சுற்றுப்பயணத்தின் முதல் பாகமாக, குழுவின் சொந்த பயன்பாட்டுக்கு அமர்த்திய “எட் ஃபோர்ஸ் ஒன்” விமானத்தில் 50,000 மைல்களுக்கும் அதிகமாய் பயணம் செய்து 21 நகரங்களில் 24 இசைக்கச்சேரிகள் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது.[46] கோஸ்டா ரிகா மற்றும் கொலம்பியாவில் முதன்முறையாக கச்சேரி நிகழ்த்திய குழு 1992க்குப் பிந்தைய தங்களது முதல் ஆஸ்திரேலிய கச்சேரிகளையும் நிகழ்த்தியது. மே 12 அன்று சம்வேர் பேக் இன் டைம் என்கிற தலைப்பில் ஒரு புதிய தொகுப்பு இசைத்தொகுப்பை இக்குழு வெளியிட்டது. அதே பெயரில் 1980 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இசைத்தொகுப்பு முதல் 1988 ஆம் ஆண்டின் செவன்த் சன் ஆஃப் எ செவன்த் சன் வரையானவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தடங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. லிவ் ஆஃப்டர் டெத்தில் இருந்தான பல நேரலை பதிப்புகளும் இதில் அடங்கும்.[47] இந்த சுற்றுப்பயணத்தின் இறுதிப் பகுதி 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்தன.[48] பெரு மற்றும் ஈக்வடாரில் இக்குழுவின் முதல்முறையான நிகழ்ச்சி, மற்றும் 16 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இவர்களின் முதலாவது நிகழ்ச்சி ஆகியவை இதில் அடங்கும்.[49] இந்தியாவில் 2 வருட காலத்திற்குள் தங்களது மூன்றாவது நிகழ்ச்சியை 2009 ஆம் ஆண்டில் நடந்த ராக் இன் இந்தியா விழாவில் சுமார் 20,000 ரசிகர்களுக்கு முன்னதாய் இக்குழு இசை நிகழ்த்தியது. இச்சுற்றுப்பயணத்தின் இறுதிப் பகுதி ஏப்ரல் 2 அன்று ஃபுளோரிடாவில் நிறைவுற்றது. அதன் பின் சுற்றுப்பயணத்தில் இருந்து இக்குழு ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டது. 20 ஜனவரி 2009 அன்று இக்குழு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், தேர்ந்தெடுத்த திரைப்படங்களின் மீதான ஒரு முழு நீள ஆவணப் படத்தை ஏப்ரல் 21 அன்று வெளியிட இருப்பதாக தெரிவித்தது. அயர்ன் மெய்டன்: பிளைட் 666 என்று தலைப்பிடப்பட்ட இப்படம் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் “சம்வேர் பேக் இன் டைம்” சுற்றுப்பயணத்தின் முதல் பகுதி சமயத்தில் எடுக்கப்பட்டதாகும்.[50] 2010 ஆரம்ப காலத்திற்கு இசைப்பதிவக நேரத்தை அயர்ன் மெய்டன் முன்பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அநேகமாக அந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அதற்கு அடுத்த வருடத்தில் மீண்டும் சுற்றுப்பயணம் இருக்கலாம் என்றும் நிகோ மெக்பிரெய்ன் நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தினார்.[51] 2009 BRIT விருதுகள் விழாவில், இந்த குழு சிறந்த நேரலை நிகழ்ச்சிக்கான விருதினை வென்றது.[52] ஸோவ் பவுலோவில் மார்ச் 15, 2009 அன்று நடந்த நேரலை நிகழ்ச்சியில் அந்நிகழ்ச்சி தான் தங்களது தொழில்வாழ்க்கையில் மிகப்பெரியது என புரூஸ் மேடையில் அறிவித்தார். உண்மையில் இந்த 100,000 பேர் என்பது மற்ற குழுக்கள் இல்லாமல் தனி நிகழ்ச்சி ஒன்றுக்கு அயர்ன் மெய்டனின் எல்லா காலத்திற்குமான அதிகப்பட்ச ரசிகர் வருகையாய் இருக்கிறது. இந்த வருகை சிலி நிகழ்ச்சியைக் காட்டிலும் (சுமார் 70,000 ரசிகர்கள்) பெரியது என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.[53] ஒரு புதிய இசைத்தொகுப்பை எழுதி இசைப் பதிவு செய்யும் திட்டம் அயர்ன் மெய்டனுக்கு இருப்பதாகவும், அநேகமாய் அந்த இசைத்தொகுப்பு 2009 ஆம் ஆண்டில் வெளிவரலாம்[54] என்றும் சம்வேர் பேக் இன் டைம் சுற்றுப்பயண சமயத்தில், புரூக் டிக்கின்சன் தெரிவித்தார். ஸ்டீவ் ஹாரிஸ் அளித்த நேர்காணலில் நிச்சயமாக இன்னொரு இசைத்தொகுப்பு தயாரிக்கப்படும் என்றார். 15 இசைப்பதிவக இசைத்தொகுப்புகள் செய்ய வேண்டும் என்கிற லட்சியம் தனக்கு எப்போதும் இருந்ததாய் அப்போது அவர் குறிப்பிட்டார். வருங்கால சுற்றுப்பயணங்களில் தங்களது மிக சமீபத்திய அயர்ன் மெய்டன் விடயங்கள் இடம்பெறும் என்றும் டிக்கின்சன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.[55] புதிய அயர்ன் மெய்டன் இசைத்தொகுப்பு 2010 ஆம் ஆண்டில் முடிக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2011 ஆம் ஆண்டிலோ ஒரு சுற்றுப்பயணம் இருக்கும் என்றும் ஒரு நேர்காணலில் நிகோ மெக்பிரெய்னும் தெரிவித்திருந்தார்.[56] நவம்பர் 2 அன்று பிபிசி செய்திகளிடம் பேசிய ஜேனிக் கெர்ஸ், இசைக்குழு ஏற்கனவே புதிய பாடல்களை எழுதிவிட்டதாகவும், புதிய இசைத்தொகுப்பிற்கான தொகுப்பு மற்றும் ஒத்திகைக்காக பிரான்சு நாட்டின் பாரிஸ் நகருக்கு செல்லவிருப்பதாகவும் உறுதி செய்தார்.[57] மேளக் கலைஞர் நிகோ மெக்பிரெய்ன் அளித்த இன்னுமொரு நேர்காணலில் குழு புதிய இசைத்தொகுப்பிற்காக எட்டு பாடல்களை எழுதி முடித்து விட்டதாகவும் அவை 2011 ஆம் ஆண்டில் வெளியாகும் என்றும் உறுதிப்படுத்தினார்.[58] 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அயர்ன் மெய்டன் வெளியிட்ட அறிவிப்பில், அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு விழாக்களின் தலைமை இசைநிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.[59][60][61][62] ![]() பாரம்பரியம்அயர்ன் மெய்டன் தங்களது வட்டு குறிப்புகளில் ”அப் த அயர்ன்ஸ்” என்கிற வாசகத்தை பல சமயங்களில் பயன்படுத்தக் காணலாம். இக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு மேலாடைகளிலும் இந்த வாசகம் காணப்பட முடியும். “தி அயர்ன்ஸ்” என்பது லண்டன் வெஸ்ட் ஹேம் யுனைடெட் கால்பந்து குழுவைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீவ் ஹாரிஸ் இக்குழுவின் ரசிகர். அயர்ன் மெய்டன் ரசிகர்கள் மற்ற அயர்ன் மெய்டன் ரசிகர்களை பார்க்கும் போதும் அவர்களுக்கு விடை கொடுக்கும்போதும் வாழ்த்து வாசகமாக இதனைப் பயன்படுத்துவது அறியப்பட்டதாகும். அயர்ன் மெய்டனின் குழுச் சின்னமான எட்டி, குழுவின் அறிவியல் கற்பனை மற்றும் திகில் கலந்த இசைத்தொகுப்பு உறை ஓவியத்திலும் நேரலை நிகழ்ச்சிகளிலும் எப்போதும் காட்சியளிப்பதாகும். 1992 ஆம் ஆண்டு வரை டெரெக் ரிக்ஸ் எட்டியை வரைந்து கொண்டிருந்தார். ஆயினும் மெல்வின் கிராண்ட் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களின் பல்வேறு படைப்பு வடிவங்களும் இருக்கின்றன. குழு வெளியிட்ட காணொளி விளையாட்டு, வரைகலைப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து விற்பனைப் பொருட்களிலும் எட்டி இடம்பெறுகிறது. குழு பற்றிய தவறான கருத்துகள்1982 ஆம் ஆண்டில், தங்களது மிகப் பிரபலமான, சர்ச்சைக்குரிய மற்றும் போற்றப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஒன்றான தி நம்பர் ஆஃப் தி பீஸ்டை இக்குழு வெளியிட்டது. இதனையடுத்து கிருத்துவ குழுக்கள், குறிப்பாக அமெரிக்க குழுக்கள், இந்த இசைக்குழுவை சாத்தானியவாதம் பேசுவது என்றும் புனிதமற்றது என்றும் முத்திரை குத்தின. இசைக்குழுவின் இசைத்தொகுப்புகளை அடித்து நொறுக்குவதும் தீயிட்டு கொளுத்துவதும் சாதாரண நிகழ்வாய் இருந்தது. இதே காரணங்களுக்காக 90களில் இக்குழு சிலியில் நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து தடை செய்யப்பட்டது (அந்நாட்டை ஆண்ட ராணுவக் குழு மீது கத்தோலிக்க அதிகார வரிசை செலுத்திய செல்வாக்கின் காரணமாக). ஆனால் இந்த நம்பிக்கைக்கு மாறாய், இக்குழு சாத்தானியவாதமுற்றது அல்ல. தங்களது சில பாடல்கள் மற்றும் இசைத்தொகுப்பு அட்டைகளைப் பார்த்து இசைக்குழுவுடன் சாத்தானிய பிம்பம் இணைத்துக் காட்டப்படுவதாகக் கூறிய இக்குழு, தங்களது மத நம்பிக்கைகளுக்கு அது தொடர்புடையதில்லை என்றும் தங்களது இசையின் மைய அம்சமும் அது அல்ல என்றும் விளக்கமளித்தனர். அயர்ன் மெய்டனின் தி இயர்லி டேஸ் இறுவட்டில் அடங்கியிருக்கும் நேர்காணலில், ஸ்டீவ் ஹாரிஸ் தான் ஒரு சாத்தானியவாதி அல்ல என்பதை தெளிவாய்க் குறிப்பிடுகிறார். குழுவின் சமீபத்திய இசைத்தொகுப்புகளில் போர், மதம், பயங்கரவாதம், ஊழல் மற்றும் இன்றைய நெருக்கடி மற்றும் நிகழ்வுகள் குறித்த பாடல்களும் பாடல்வரிகளும் தான் இடம்பெறுகின்றனவே அன்றி சாத்தான் அல்லது ஆவி குறித்தவை அல்ல. தங்களது மிக சமீபத்திய இசைப்பதிவக முயற்சியான எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத் பிரதானமாக போர், மன்ஹாட்டன் திட்டம், பிறப்பு மற்றும் மதம் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சிறப்பு விமானம்2008 “சம்வேர் பேக் இன் டைம்” சுற்றுப்பயண போக்குவரத்திற்காக ஆஸ்ட்ராயஸ் 757 விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியிருப்பதாக 31 அக்டோபர் 2007 அன்று அயர்ன் மெய்டன் அறிவித்தது. முன்னணி பாடகரான புரூஸ் டிக்கின்சன் ஆஸ்ட்ராயஸ்க்கான வர்த்தகரீதியான விமானஓட்டி தகுதி கொண்டிருந்தவர் என்பதால் புரூஸ் டிக்கின்சனே இந்த விமானத்தின் விமானஓட்டியாக இருந்தார். இசைக்குழுவின் உறுப்பினர்கள் பெயரால் இந்த விமானத்திற்கு “எட் ஃபோர்ஸ் ஒன்” என பெயரிடப்பட்டது. ஒரு சிறப்பு அயர்ன் மெய்டன் தோற்றத்திற்கு விமானம் மறுபூச்சு செய்யப்பட்டதோடு, “சம்வேர் பேக் இன் டைம்” சுற்றுப்பயணத்தில் குழு பயணம் செய்ய இருக்கும் இடங்களின் பட்டியலும் இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் இருந்த 28 மே 2008 வரையான சமயத்தில் விமானம் வர்த்தகரீதியான பயணங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது, அயர்ன் மெய்டன் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் சம்வேர் பேக் இன் டைம் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதி காலத்தின்போது இதே விமானம் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. “அயர்ன் மெய்டன்: பிளைட் 666” என்னும் விருது வென்ற ஆவணப்படத்திலும் இந்த விமானம் ஒரு பிரதான பாத்திரத்தை ஏற்கிறது.[63] விருதுகள்
இசைசரிதம்
இசைக்குழு உறுப்பினர்கள்இந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: List of Iron Maiden band members.
நடப்பு உறுப்பினர்கள்
முன்னாள் உறுப்பினர்கள்
மேலும் காண்க
குறிப்புதவிகள்
குறிப்புகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia