அய்யக்கவுண்டம்பாளையம்
அய்யக்கவுண்டம்பாளையம் (Ayegoundanpalayam) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது வரகூராம்பட்டி ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.[1] இந்த ஊரானது திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் நான்காம் கல் தொலைவில் உள்ளது. பாளையம் என்பது இவ்வூரின் பொதுக்கூறு. அய்யக்கவுண்டன் என்னும் ஒருவரின் பெயர் சிறப்புக்கூறாக அமைந்துள்ளது. அய்யக்கவுண்டன் என்பவர் வாழ்ந்த காலம், அவர் பெயரால் ஊர் அமைவதற்கான காரணம் முதலியன விளங்கவில்லை. கொங்கு வேளாளர் குடும்பங்கள் கிட்டத்தட்ட ஐம்பது, சானார் குடும்பங்கள் கிட்டத்தட்ட இருபது, பறையர் குடும்பங்கள் ஏறத்தாழப் பத்து என்னும் அளவில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. கிணற்றுப் பாசனம் ஓரளவு நடைபெறுகின்றது. பெரும்பாலும் மேட்டுக்காடுகள் எனப்படும் மானாவாரி நிலங்கள் இங்குள்ளன. மாரியம்மன் கோயில் ஒன்றும் முனியப்பன் கோயில் ஒன்றும் இவ்வூரின் சிறப்பு. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia