அய்யனார் வீதி
அய்யனார் வீதி (Ayyanar Veethi) என்பது 2017 ஆம் ஆண்டைய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் யுவன், புதுமுகம் சாரா செட்டி, சஞ்சு மோகன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, பொன்வண்ணன், பாக்யராஜ் போன்றோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர்கள்
தயாரிப்புகிராமப்புற நாடகத் திரைப்படமான இப்படத்தில் யுவன் முக்கிய கதாபாத்திரத்திலும், பொன்வண்ணன் மற்றும் பாக்யராஜ் பிற முக்கிய வேடங்களிலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.[1] பாடகர் யுகே முரளி இந்த படத்தில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.[2] புலிப்பார்வை புகழ் புதுமுகம் சாரா செட்டி மற்றும் சிஞ்சு மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். அவர்கள் முறையே பொன்னவன்னன் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் ஏற்ற பாத்திரங்களின் மகள்களாக நடித்தனர். இப்படம் இராஜபாளையத்தில் படமாக்கப்பட்டது.[3] இப்படத்திற்காக இருபத்தேழு அடி உயர அய்யனார் சிலை உருவாக்கப்பட்டது.[4] இசைபடத்திற்கான இசையை யுகே முரளி மேற்கோண்டார்.[5][6]
வெளியீடுடைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றைக் கொடுத்து, "இது (படம்) 80 மற்றும் 90 களின் மெலோடிராமாக்களின் மோசமான கூறுகளின் தொகுப்பைப் போல வெளிவந்துள்ளது" என்று எழுதியது.[7] டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் படத்திற்கு ஒளிப்பதிவைப் பாராட்டியது. ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றரை மதிப்பெண்ணைக் கொடுத்தது.[8] பின்னணி இசை மற்றும் கதையில் உள்ள போதாமைகளை விமர்சித்த தினமலர் இசையை பாராட்டியது.[9] மாலைமலர் பாடல் இசையை பாராட்டியது என்றாலும் பின்ணனி இசையை விமர்சித்தது.[10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia