அரக்கான் மலைகள்
அரகான் மலைகள் அல்லது (அரகான் மலைத்தொடர், ரஹினி மலைத்தொடர், ரஹினி யோமா, அரகான் யோமா, ரஹினி ரோமா, அரகான் ரோமா; பர்மிஸ்: ရခိုင်ရိုးမ) மேற்கு பர்மாவில் (மியான்மர்) உள்ள ஒரு மலைத்தொடர் அகும். ரஹினி கடற்கரைக்கும் மத்திய பர்மாவில் பாயும் ஐராவதி ஆற்று வடிநிலப்பகுதிக்கும் இடையே இந்த மலைத்தொடர் உள்ளது. வில் வடிவ இணை தொடர்களாக உள்ள இம்மலைகள் இந்தியாவின் அசாம், நாகலாந்து , மிசோரம் மற்றும் மியான்மர் வரை தொடர்ச்சியாக காணப்படுகிறது. வடக்கில் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கி தெற்கில் நெக்ரைஸ் முனை வரை நீண்டுள்ளது. நாகா மலைகள், சின் மலைகள் மற்றும் பட்கா தொடரிலுள்ள லுஷய் மலைகள் அரகான் மலைதொடரில் அடங்கும் [1]. இந்த மலைத்தொடர் வங்காள விரிகுடா கடலில் அமிழ்ந்து பின் அந்தமான் நிகோபார் தீவுகளாக மேலெழும்பி காணப்படுகிறது. புவியியல் மற்றும் தோற்றம்![]() இந்தியா மற்றும் நேபாளம் இடையே இந்திய நிலத்தட்டு யுரேசியா நிலத்தட்டு மீது ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக அராகன் மலைகளும் அதன் கிழக்கு மேற்கில் இணையாக காணப்படும் வளைவுத்தொடர்களும் தோன்றியது[2][3]. அமைப்புஅரகான் மலைத்தொடர் 950 கி.மீ. (600 மைல்கள்) நீளம் உடையது, இதில் மலைப்பகுதி நீளம் மட்டும் சுமார் 400 கி.மீ. (250 மைல்) ஆகும். இந்த தொடரின் முகட்டு உச்சிப்புள்ளி 3.094 மீட்டர் உயரமுடைய நாட் மா தவுங் அல்லது மவுண்ட் விக்டோரியா ஆகும். வரலாறுஅரகான் மலைகள் ரஹினி கடற்கரையை பர்மாவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. இந்திய துணைகண்டத்திலிருந்து மத்திய பர்மா பகுதிகளை இந்த மலைத்தொடர் பிரிப்பதால் ரஹினி பகுதி மக்கள் மொழி மற்றும் கலாசார அடிப்படையில் பர்மிய மக்களிலிருந்து வேறுபடுகின்றனர். மேலும் பர்மிய படையெடுப்புகளிலிருந்தும் இம்மலைத்தொடர் பாதுகாப்பாக இருந்திருக்கிறது. அரகான் நாகரிகத்தின் பிரதான இடங்களாக இப்பகுதியின் மரவுக் உ (Mrauk U) மற்றும் வைதலி (Waithali) ஆகிய கடற்கரை நகரங்கள் திகழ்கின்றன. சனவரி 1943 மற்றும் மார்ச் 1944 இடையே இந்த மலைப்பகுதிகளில் கடுமையான போர்கள் நிகழ்ந்தன. சப்பானிய ராணுவப்படையின் 33 மற்றும் 55 வது பிரிவுகள் அரகான் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்து இராணுவத்தை எதிர்கொண்டது [4]. சூழலியல்தென்மேற்கு பருவ மழையை இந்த மலைத்தொடர் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது ஒரு தடுப்பு அரணாக அமைந்து மத்திய பர்மா பகுதியில் மலை பொழிவை தடுக்கிறது. இதனால் அரகான் மலைதொடரின் மேற்குச் சரிவுப்பகுதியில் மாதத்திற்கு 1 மீ (39 அங்குலம்) என்ற அளவில் மழை பொழிகிறது. கிழக்குப் பகுதி மேற்குப்பகுதியை விட வறண்டு காணப்படுகிறது.[1] சின் மலைகள் மற்றும் அரகான் யோமா மலைசார் சூழ்நிலைமண்டலதில் அடங்கும் இம்மலைப்பகுதி ஆசிய யானைகளின் வாழிடங்களாக உள்ளன. அருகி வரும் இனமான அரகான் வன ஆமைகள் இங்கு காணப்படுகின்றன.[5] ![]() போக்குவரத்துரகினி மாநிலத்தை மத்திய பர்மாவுடன் இணைக்கும் இரண்டு முக்கிய சாலைகள் அராகன் மலைத்தொடர் இடையே செல்கின்றன. வடக்கில் உள்ள சாலை [மஹ்வி] க்கும் ஆன் க்கும் இடையே செல்கிறது. தெற்கில் உள்ள சாலை பயாய் முதல் தவுங் கொக் வரையும் பின் இந்த சாலை தாண்ட்வி மற்றும் ங்கபாலி கடற்கரைக்கும் Ngapali beach செல்கிறது. நீண்ட நெடிய பயண நேரம் பிடிக்கக்கூடிய இந்த சாலைகளை சில சுற்றுலா பயணிகள் பயன்படுதுகிறார்கள் இந்த சாலைகள் தவிர மற்ற சாலைகள் பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் இல்லை.[6]. மேற்கோள்கள்
==வெளியிணைப்புகள்== http://www.britannica.com/EBchecked/topic/31961/Arakan-Mountain-Range https://en.wikipedia.org/wiki/Japanese_conquest_of_Burma http://www.searchanddiscovery.net/documents/2010/30111akhtar/ndx_akhtar.pdf |
Portal di Ensiklopedia Dunia