அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை

அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை
வகைமருத்துவக் கல்லூரி
உருவாக்கம்1964
பட்ட மாணவர்கள்100
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்50+
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.gsmcpalay.ac.in

அரசு சித்த மருத்துவக் கல்லூரி, என்பது இந்திய மருத்துவத்தின் மத்திய கழகம் (சி.சி.ஐ.எம்), புது தில்லியால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவக் கல்லூரியாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. [1]

இக்கல்லூரி திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1964ல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி மாற்று மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்கி வருகிறது.

வரலாறு

இக்கல்லூரியானது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு இந்தியப் பாரம்பரிய மருத்துவத்த்தின் மூலம் நோய்களைக் குணமாக்கும் நோக்கத்தோடு 1964ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் நிறுவப்பட்டது. இந்த கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 350 படுக்கை வசதி உள்ளது.

படிப்புகள்

இளநிலையில் சித்தா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பி.எஸ்.எம்.எஸ்) படிப்பினையும் முதுநிலையில் எம்.டி. படிப்பினை சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஒப்புதலுடன் நடத்திவருகின்றது.[2]

மாணவர் சேர்க்கை

இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் ஆயுஷ் படிப்புகளின் கீழ் பி.எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இந்த இளங்கலை படிப்பு இந்தியாவில் உள்ள மற்ற மருத்துவ படிப்புகளைப் போலவே 5 வருட காலத்திற்கு நடத்தப்படுகிறது. பி.எஸ்.எம்.எஸ்ஸின் நோக்கம் சித்த மருத்துவத்துவம் அறிவியல் அறிவினைப் கற்பிப்பதே ஆகும். இதன்மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த துறையில் ஆராய்ச்சி அறிஞர்களாக தகுதி மற்றும் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை உருவாக்குவது. 2020-21 கல்வியாண்டிலிருந்து, பி.எஸ்.எம்.எஸ்ஸில் சேர்க்கை நீட் அல்லது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் செய்யப்படுகிறது.[3] மாணவர்கள் மதிப்பெண் அல்லது தரவரிசை அடிப்படையில் பொதுக் கலந்தாய்வின் மூலம் சேர்க்கப்படுகின்றனர்.

சேர்க்கைக்கான தகுதி

வரிசை எண் பாடம் தகுதி
1. பி.எஸ்.எம்.எஸ் 10 + 2 (இயற்பியல், வேதியியல், உயிரியலுடன் முக்கிய பாடங்களாக) அல்லது அதற்கு சமமான தகுதி
2. எம்.டி (சித்தா) பி.எஸ்.எம்.எஸ் அல்லது அதற்கு சமமான தகுதி தேர்ச்சி

மேற்கோள்கள்

  1. "Govt. Siddha Medical College - Palayamkottai". www.gsmcpalay.ac.in. Retrieved 2020-11-28.
  2. "BSMS - The Tamilnadu Dr.M.G.R. Medical University". www.tnmgrmu.ac.in. Retrieved 2020-11-28.
  3. https://www.thehindu.com/news/cities/chennai/siddha-ayurveda-admission-may-use-neet-scores-institute-of-child-health-c-vijaya-baskar/article27395292.ece

வெளி இணைப்புகள்

http://www.gsmcpalay.ac.in/

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya