இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
அரவிடு மரபுவிஜயநகரப் பேரரசை ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த இம் மரபைச் சேர்ந்த முதலாமவன் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராம ராயன் ஆவார். அலிய ராம ராயன் தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர் .[1][2][3]
அரவிடு மரபினர், ஆந்திரா மாநிலம் பெனுகொண்டா என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். [4][5] அரவிடு மரபினர் ஆட்சி காலத்தில் தென் இந்தியாவில் தெலுங்கு இனத்தவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர் .[6] .
எனினும் அலிய ராம ராயன், முந்திய மரபின் கடைசி அரசனுக்குப் பதில் ஆளுநராகவே செயல்பட்டார். அலிய ராம ராயன் தலைக்கோட்டைப் போரில் இறந்ததும், அவனது தம்பியாகிய திருமலை தேவ ராயன் அரசனானார். இவரே அரவிடு மரபின் முதல் அரசனாவார். [7][8]
அரவிடு மரபின் தொடக்கம் விஜயநகரப் பேரரசின் சிதைவின் தொடக்கமாகவும் அமைந்தது. அலிய ராம ராயனைத் தவிர்த்து, இம்மரபைச் சேர்ந்த எழுவர் விஜயநகரத்தை ஆட்சி செய்தனர். விஜயநகரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றபோதும், இவர்கள் ஆட்சி 1652 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இவர்களில் எவருமே பஹமானி சுல்தான்களின் ஒன்றுபட்ட வலுவை முறியடிக்க வல்லவராக இருக்கவில்லை.