அரிவாள் மூக்கன்
அரிவாள் மூக்கன் அல்லது அன்றில் பறவை (Ibis) என்பது நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் கொண்ட ஒரு பறவை சிற்றினம். இதன் அலகு வளைந்து அரிவாள் போன்று தெரிவதால் இப்பெயர் பெற்றது. கூட்டமாக இரை தேடும் இப்பறவைகள் சேற்றில் வாழும் உயிரினங்களைத் தின்கின்றன. மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன.[1][2][3] அன்றில் பறவைகள் குறித்து தமிழ் இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளன. இப்பறவையின் அலகு வளைந்திருப்பதை கொடுவாய் அன்றில், மடிவாய் அன்றில் என்று தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தலையின் உச்சி சிவந்திருப்பதை “எலிதகைந் தன்ன செந்தலை அன்றில்” மற்றும் "நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்" என்ற குறுந்தொகை பாடல்களில் குறிப்பிட்டுள்ளன. இவைகள் அதிக சத்தத்தை எழுப்புவதை “ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய” என்ற அகநானூற்றுப் பாடலிலும், “அன்றிலும் பையென நரலும்” என்ற குறுந்தொகை பாடலிலும் பாடப்பட்டுள்ளது. பறவைப் படங்கள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia