அரேக்கிப்பா16°23′55.76″S 71°32′12.79″W / 16.3988222°S 71.5368861°W
அரேக்கிப்பா (Arequipa, எசுப்பானிய ஒலிப்பு: [aɾeˈkipa]) என்பது அதே பெயரையுடைய அரேக்கிப்பா மாநிலத்தின் தலைநகரம். இது பெரு நாட்டின் தெற்கே 904,931 மக்கள் வாழும் நகரம். மக்கள் தொகையளவில் பெரு நாட்டிலேயே இரண்டாவது பெரிய நகரம். அரேக்கிப்பா நகரம் ஆண்டீய மலைத்தொடரில், கடல் மட்டத்தில் இருந்து 2,380 மீட்டர் (7,800 அடிகள்) உயரத்தில், பனி உறைந்த உச்சியைக் கொண்ட எல் மிசிட்டி (El Misti) எரிமலை அருகே காட்சிதரும் இடத்தில் அமைந்துள்ளது. அரேக்கிப்பாவில் சில்யார் (sillar) என்றழைக்கப்படும் வெண்னிற எரிமலைக் கற்களைக் கொண்டு எசுப்பானியரின் காலனித்துவம் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்கள் நிறைய உள்ளன. இந்த வெண்ணிற கற்களால் ஆன கட்டங்களால், இந்த நகரத்திற்கு வெண்ணிற நகரம் (La Ciudad Blanca, லா சியுதாது பிளான்கா) என்னும் செல்லப்பெயர் உண்டு[1]. இந்த இந்த நகரத்தில் ஐபீரிய மக்களோடு கலந்த வெள்ளை நிற கிரியோல் மக்கள் அதிகமாக இந்த இடத்தில் வாழ்ந்ததால், காலனித்துவ நாட்களிலேயே இச் செல்லப்பெயர் பெற்றாதாகவும் கருத்துகள் உள்ளன. அரேக்கிப்பாவின் வரலாற்றுப் புகழ் மிக்க அழகிய கட்டடங்கள் உள்ள நகர நடுவகம் யுனெசுக்கோ (UNESCO)-வின் உலக மரபு இடமாக (World Heritage Site) 2000 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia