அர்ஜுன் ராம் மேக்வால்
அர்ஜுன் ராம் மேக்வா (Arjun Ram Meghwal, பிறப்பு: 20 திசம்பர், 1954)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 18 மே 2023 அன்று கிரண் ரிஜிஜூக்கு பதிலாக சட்டம் மற்றும் நீதி அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.[2][3] வாழ்க்கை வரலாறுஇவர் 20 திசம்பர், 1954 ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் என்னும் இடத்தில் பிறந்தார். 1977 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றதும், 1979 ஆம் ஆண்டில் வழக்கமான மாணவராக கலைப் பட்டப்படிப்பை முடித்ததும், 1982 ஆம் ஆண்டில், இவர் ஆர்ஏஎஸ் தேர்வுகளுக்குத் தகுதி பெற்று ராஜஸ்தான் உத்யோக் சேவாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பிகானேர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பின்னர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், பிகானேர் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மக்களவை சபாநாயகர் இவரை மக்களவை மன்றக் குழுவின் தலைவராக நியமித்தார். இவர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia