அர்ணாப் கோஸ்வாமி
அர்ணாப் கோஸ்வாமி (அசாமிய மொழி: অৰ্ণৱ গোস্বামী) ஓர் இந்திய ஊடகவியலாளர் மற்றும் இந்திய செய்தி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ்-ல் முதன்மை செய்தி ஆசிரியர் (Editor-in-Chief) ஆவார்[1][2]. நியூஸ் ஹவர் என்கிற பெயரில் இவர் தொகுத்து வழங்கும் ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி வாரநாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இத்துடன் இவர் ஃப்ராங்க்லி ஸ்பீக்கிங் வித் அர்ணாப் (Frankly Speaking with Arnab) என்கிற பெயரில் சிறப்பு நபர்களைக் கொண்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார் [3][4]. தன்னுடைய ஊடக ஆளுமைத்தன்மைக்காக பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் காம்பேட்டிங் டெரரிசம்: தி லீகல் சேலஞ்ச் (Combating Terrorism: The Legal Challenge) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். குடும்பமும் கல்வியும்இவரது குடும்பம் அசாமின் பார்பேட்டா மாவட்டத்திலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். அங்கிருந்து சில்லாங் வந்து பின் குவகாத்தியில் குடியேறினார்கள். இவரின் தந்தை வழி பாட்டனார் ரஞ்சனி கன்டா கோசுவாமி குவகாத்தி உயர் நீதிமன்றத்தில் [5] வழக்குரைநர். அர்ணாபின் பெரியப்பா தினேசு கோசுவாமி அரசியல்வாதி. வி. பி. சிங் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தார்[5], அர்ணாபின் தந்தை மனோரஞ்சன் தில்லி பொறியியல் கல்லூரியில் படித்து இராணுவத்தில் பணியில் சேர்ந்தார். பணி காரணமாக அடிக்கடி இடம்மாற வேண்டி இருந்ததால் அர்ணாபின் பள்ளி கல்வி பல ஊர்களில் தொடர்ந்தது.[5] அர்ணாபின் அக்கா மருத்துவராக பெங்களூருவில் வசிக்கிறார். அர்ணாபின் தாய் வழி பாட்டனார் கௌரிசங்கர் பட்டாச்சாரியா தீவிர பொதுவுடமைவாதி. அர்ணாப் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்று பின் பிரித்தனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டில் சமூகமானிடவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[5] தொழில்இலண்டனில் இருந்து வந்ததும் 1994இல் தி டெலிகிராப் இதழில் பணியில் சேர்ந்தார். அதற்கு இலண்டனில் பழக்கமான அவரின் நண்பர் சுரஞ்சன் தாசு உதவினார்.[5] 1995-இல் என்டிடிவியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவர் ராஜ்தீப் தேசாயிக்குக் கீழ் பணியாற்றினார். ஏப்பிரல் 2004இல் அங்கிருந்து விலகி டைம்சு நவ் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்தார்.[5] பின்னர் அர்ணாப் கோசுவாமி 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியில் டைம்ஸ் நவ் மற்றும் ஈ.டி.நவ் ஆகிய தொலைக்காட்சிகளின் முதன்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.[6] ரிபப்ளிக் தொலைக்காட்சிஅர்னாப் கோஸ்வாமி, 6 மே 2017 அன்று துவக்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராகவும், அதன் பெரும் பங்குதாரர்களில் ஒருவராகவும் உள்ளார்.[7] தற்கொலைக்கு தூண்டிய வழக்குகோஸ்வாமி 2020 நவம்பர் 4 ஆம் தேதி அன்வே நாயக்கின் தற்கொலை வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் பிரிவு 34 இன் கீழ் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[8][9][10] நாயக் தனது தற்கொலைக் குறிப்பில் கோஸ்வாமி உட்பட மூன்று நபர்கள் தான் செய்த பணிக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.[11] அர்னாப் கோஸ்வாமி 2020 நவம்பர் 11 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார்.[12][13][14] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia