அர்தோக்சோ

காந்தாரத்தில் காணப்படும் குசானர்களின் சிற்பத்தில் நெருப்புக் கடவுள் பாரோவுடன் (இடது) அர்தோக்சோ. இந்த பாணி கிரேக்க-பௌத்த கலையால் ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும், அர்தோக்சோ பழங்களாலும் பூக்களாலும் நிரப்பப்பட்டுள்ள ஒரு கொம்பினை (மேல் வலதுபுறம்) வைத்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இது கிரேக்க தெய்வமான டைச்சியிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அர்தோக்சோ ( Ardoksho ) என்பது செல்வத்தின் ஈரானிய தெய்வமாகும். முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் குசானப் பேரரசின் பெண் தெய்வமாக இருந்தது. இவள் கிழக்கு ஈரானிய தெய்வமாகவும் இலட்சுமியின் மாற்றுப் பெயராகவும் கருதப்படுகிறாள்.[1] இவள் அவெத்தாவில் ஆஷி என்று அழைக்கப்படுகிறாள்.[1]

பௌத்தத்தின் சில வகைகளில் காணப்படும் ஹாரிதி தெய்வத்திற்கு ஒப்பானவளாக இவள் அடிக்கடி கருதப்படுகிறாள். பாரசீக தெய்வமான அனாகிதா, கிரேக்க டைச், உரோமன் பார்துனா, இந்து ஸ்ரீ ஆகியவற்றுடன் ஒப்புமைகளும் வரையப்பட்டுள்ளன.

குசான சகாப்தத்தின் நடுப்பகுதியில், குசான நாணயங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆண் இணையான ஓஷோவைத் தவிர அர்தோக்சோ மட்டுமே தெய்வமாக இருந்தாள்.

சான்றுகள்

  1. 1.0 1.1 Foltz, Richard. A History of the Tajiks: Iranians of the East. p. 66.
  2. CNG Coins
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya