அர்த்தமாகதிப் பிராகிருதம்
அர்த்தமாகதிப் பிராகிருதம் என்பது, தற்கால பிகார்[3] மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வந்ததாகக் கருதப்படும் ஒரு நடு இந்தோ-ஆரிய மொழியும், நாடகப் பிராகிருத மொழியுமாகும். மேலும், இம்மொழி சில முற்காலச் சமண மற்றும் பௌத்த நாடகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஒரு மைய இந்தோ-ஆரிய மொழியாயிருக்கக்கூடும். மேலும், இது பாலி மற்றும் பிற்கால சௌரசேனிப் பிராகிருதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாயுமிருக்கலாம்.[4] இது வட்டார மாகதிப் பிராகிருதத்தின் முன்னோடி மொழியாகக் கருதப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது (பொருள்: அரை-மாகதி). பாலியுடனான தொடர்புதேரவாத பௌத்த மரபு, நீண்டகாலமாக பாலியும் மாகதி மொழியும் ஒத்தவை எனக் கருதி வந்ததோடு, இதற்கும் அர்த்தமாகதி மொழிக்கும் பல ஒப்புமைகள் இருந்துள்ளன. அர்த்தமாகதி மொழி சமண அறிஞர்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதோடு,[5]சமண ஆகமங்களில் இடம்பெற்றுள்ளது. கௌதம புத்தரும், தீர்த்தங்கரர் மகாவீரரும் மகதத்தில் அறவுரையாற்றியுள்ளனர். அர்த்தமாகதிக்கும், பிற்கால மாகதிப் பிராகிருதத்துக்குமிடையில் வேற்றுமைகள் உள்ளதோடு, இவ்வேற்றுமைகள் பாலிமொழியுடனான வேற்றுமைகளுடன் ஒத்துள்ளது. எடுத்துக்காட்டாக, அர்த்தமாகதியில் வரலாற்று ரீதியான, [ல்] ஓசை காணப்படும் அதேவேளை, பிற்கால மாகதியில் [ல்] ஓசை [ர்] ஓசையாக மாற்றம் பெற்றுள்ளது. மேலும், பெயர்ச்சொல் வடிவ மாற்றத்தில், அர்த்தமாகதியில் சொற்கள் [-ஓ] முடிவைப் பெறும் அதேவேளை, மாகதிப் பிராகிருதத்தில் [-ஏ] முடிவு பல இடங்களில் வருகிறது. பாலி: தம்மபதம் 103:
அர்த்தமாகதி: சமன் சூத்தம் 125:
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia