அர்விந்த் கிருஷ்ணா (Arvind Krishna)(பிறப்பு 1962) இவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகியாவார். இவர் ஏப்ரல் 2020 முதல் ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.[3] கிருஷ்ணா தனது வாழ்க்கையை 1990 இல் ஐபிஎம்மில், ஐபிஎம்மின் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் [4] தொடங்கினார். மேலும் 2015 இல் மூத்த துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[5][6]
கிருஷ்ணா 1990 இல் ஐபிஎம்மில் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். மேலும் 2015 ஆம் ஆண்டில் ஐபிஎம் ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[10] பின்னர் இவர் ஐபிஎம்மின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருள் பிரிவின் மூத்த துணைத் தலைவரானார். இவர் ஒரு பன்னிரெண்டுக்கும் அதிகமான காப்புரிமைகளுக்கு இணைந்து எழுதியுள்ளார், ஐஇஇஇ மற்றும் ஏசிஎம் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்துள்ளா. மேலும் தொழில்நுட்ப பத்திரிகைகளில் விரிவாகவும் எழுதியுள்ளார். செயற்கை நுண்ணறிவு, கிளவுட், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றில் ஐபிஎம் நிறுவனத்திற்கான புதிய சந்தைகளை உருவாக்குவதற்கும் விரிவாக்குவதற்கும் இவர் தலைமை தாங்கினார். ஐபிஎம் 34 பில்லியன் டாலர் ரெட் ஹட்டை கையகப்படுத்தியதன் பின்னணியில் இவர் ஒரு உந்து சக்தியாக இருந்தார். இது சூலை 2019 இல் மூடப்பட்டது.
சைப்ரல் 6, 2020 முதல் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2012 முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கின்னி ரோமெட்டி பதவி விலகியதையடுத்து இவர் அப்பதவிக்கு வந்தார். இவர் அமெரிக்காவின் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்தியதலைமை நிர்வாக அதிகாரியாகசத்யா நாதெல்லா, சாந்தனு நாராயண் மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோருடன் சேர்ந்தார்.